Weight Loss Remedy: உடல் எடையைக் குறைக்கும் அற்புத உணவுகள்! ஆச்சரியப் பட வைக்கும் ரிசல்ட்!-weight loss foods for biggest change in fitness - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss Remedy: உடல் எடையைக் குறைக்கும் அற்புத உணவுகள்! ஆச்சரியப் பட வைக்கும் ரிசல்ட்!

Weight Loss Remedy: உடல் எடையைக் குறைக்கும் அற்புத உணவுகள்! ஆச்சரியப் பட வைக்கும் ரிசல்ட்!

Suguna Devi P HT Tamil
Sep 20, 2024 01:02 PM IST

Weight Loss Remedy: மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு முறை உடலில் பெரும் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உடல் எடை அதிகரிப்பு போன்ற தொல்லைகளால் பெரும்பாலானோர் பாதிக்கபடுகின்றனர். உணவு முறை மாற்றத்தை சீராக மாற்றினால் மட்டுமே இதில் இருந்து விடுபட முடியும்.

Weight Loss Remedy: உடல் எடையைக் குறைக்கும் அற்புத உணவுகள்! ஆச்சரியப் பட வைக்கும் ரிசல்ட்!
Weight Loss Remedy: உடல் எடையைக் குறைக்கும் அற்புத உணவுகள்! ஆச்சரியப் பட வைக்கும் ரிசல்ட்!

சீரான வாழ்க்கை முறை 

தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் உலகின் சாதனைகள் என மனிதர்கள் முன்னேற்ற பாதையில் செல்லும் அதே வேளையில் இரவு நேர பணி, சரியான தூக்கமினமை, துரித உணவுகள் (Fast Foods)  என வாழ்க்கை நிலை தலைகீழாக மாறியுள்ளது. வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கும் மக்கள் அவர்கள் விரும்பும் உணவுகளை நினைத்த நேரத்தில் உண்ணும் பழக்கமும் அதிகரித்துள்ளது. 

சீரான வாழ்க்கையை சாத்தியப்படுத்துவதில் உணவே முதன்மையானதாக இருக்கிறது. உடலுக்கு சத்துக்களை வழங்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். தினம் தோறும் உடற்பயிற்சி, சீரான 8 மணி நேர தூக்கம் ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கையை தருகிறது. 

உணவு வகைகள் 

உணவில் தினந்தோறும் முட்டையை சேர்க்க வேண்டும். பொதுவாக முட்டையில் அதிக கொழுப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் முட்டையில் அதிக அளவு புரதம் இருப்பதால் உடலுக்குத் தேவையான உறுதி அளிக்கிறது. பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள் அனைத்தும் பல விட்டமின்களை உள்ளடக்கியுள்ளது. கீரை, பீன்ஸ், வெண்டைக்காய், புடலங்காய் உள்பட அனைத்து பச்சை காய்கறிகளையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிரீன் டீ குடிப்பது உடலுக்குத் தேவையான ஆண்டி ஆக்சிடன்ட் இருப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்பை குறைக்கும்.  

மீன் உடல் எடை குறைப்பில் சாப்பிட வேண்டிய முக்கிய உணவாகும். மீனில் அதிகமான புரதம் உள்ளதால் தேவையற்ற கொழுப்பகளை உடலில் சேர விடாமல் தடுக்கலாம். மாலை நேரங்களில் பசி எடுக்கும் போது காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் சாப்பிடலாம். முளை காட்டிய தானியங்கள் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சாப்பிடலாம். அவக்கடோ , சியா விதைகள் ஆகியவையும் சிறந்த எனர்ஜி தருவதால் காலை உணவில் இதனை சாப்பிடலாம். 

தவிர்க்க வேண்டியவை 

ஒரே  நாளில் அடிக்கடி தேநீர் குடிப்பது, சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது. நீண்ட நேரம் தூங்காமல் டிஜிட்டல் சாதனங்களை உபயோகிக்க கூடாது. குறிப்பாக எந்த நேரத்திலும் சாப்பிடும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்து ரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.