Weight Loss : அதிரடியாக 23 கிலோ எடை குறைப்பு; உங்கள் ஃபிட்னஸை குலைக்கும் எதிரிகளாகும் 7 விஷயங்கள் - பெண் கூறுவது என்ன?
எத்தனை முயன்றும் உடல் எடையைக் குறைக்க முடியாமல் போவதற்கான காரணங்கள் என்ன? 23 கிலோ எடை குறைத்த பெண் கூறுவதைக் கேளுங்கள்.

ரிதி சர்மா என்ற பெண் 23 கிலோ எடையைக் குறைத்துள்ளார். அவர் தனது எடை குறைப்பு பயணம் குறித்து நம்மிடம் விளக்குகிறார். அவரது எடை குறைப்பு பயணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் எவ்வாறு உடற்பயிற்சி செய்வார்? என்ன சாப்பிடுவார் என்பது குறித்தெல்லாம் விளக்கியுள்ளார். ஆனால் அவர், சில நேரங்களில் எவ்வளவு உடல் பயிற்சி செய்தாலும் நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. ஆனால் நாம் சோர்ந்துவிடக்கூடாது. எங்கு தவறுகிறோம் என்று பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எடை குறைப்பு பயணத்தில் நாம் செய்யும் தவறுகளாக அவர் சுட்டிக்காட்டுவது என்ன?
நீங்கள் உணவை கட்டுப்படுத்தக் கூடாது. ஆனால் சர்க்கரை மற்றும் ஜங்க் உணவுகளை தவிர்க்கவேண்டும்
அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் சாப்பிடுவது, தேவையான அளவு புரதம் கிடைக்காமல் போவது, அதிக சர்க்கரை மற்றும் ஜங்க் உணவுகளை உட்கொள்வது என நீங்கள் செய்தால் அது உங்களுக்கு எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்காது. இரவு தாமதமாக அதிகமாக சாப்பிடுவது உங்களின் வளர்சிதையை மெதுவாக்கும். இது உங்கள் உடல் எடை குறைப்பை தடுக்கும்.
நீங்கள் நடை அல்லது கார்டியோவில் கவனம் செலுத்துவீர்கள்
கார்டியோ மற்றும் பலத்தை அதிகரிக்கும் பயிற்சிகள் இரண்டும் தேவை என்று அவர் கூறுகிறார். வாரத்தில் 5 முதல் 6 முறை 40 முதல் 45 நிமிட உடற்பயிற்சி கட்டாயம் தேவை. இது உங்கள் தசைகளை வலுப்படுத்தும். மேலும் உங்கள் உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கும்.
உடனடி பலன் கிடைக்காவிட்டால் விட்டுவிடுவது
உடல் எடை என்பது மிகவும் பொறுமையாகத்தான் குறையும். அது எவ்வளவு மெதுவாக நடந்தாலும் நீங்கள் பொறுமையாக பயிற்சிகளை செய்துகொண்டே இருக்கவேண்டும்.
மனஅழுத்தம்
உங்களின் உடல் எடை குறையாவிட்டால் அல்லது அதிக எடையுள்ளவர்களாக இருப்பதற்காக மனஅழுத்தம் கொள்வது. மனஅழுத்தமும் உடல் எடையை அதிகரிக்கும் காரணியாகும். எனவே அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்கவேண்டும. படிப்படியாக உடல் எடை குறைய நாளாகும். உடனடியாக எடையைக் குறைக்க தவறான உணவு முறைகளை பின்பற்றாதீர்கள்.
வேகவேகமாக உடற்பயிற்சி செய்வது, சரியான முறையில் செய்யாமல் இருப்பது
நீங்கள் சரியான உடற்பயிற்சி முறைகளில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு பயிற்சியையும் நேரம் எடுத்து கற்றுக்கொள்ளவேண்டும். இது உடற்பயிற்சியின் பயனை இரட்டிப்பாக்கும்.
மருத்துவ நிலைகள் உங்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும்
பிசிஓஎஸ், பிசிஓடி, தைராய்ட் பிரச்னைகள், அதிக கார்டிசால் அளவு மற்றும் இன்சுலின் எதிர்ப்பு என பல்வேறு காரணங்கள் உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் இடையூறு செய்து அதை தாமதப்படுத்தலாம். எனவே வலுகொடுக்கும் பயிற்சிகள், நடைப்பயிற்சி ஆகியவை இவற்றுக்கு ஏற்ற பயிற்சிகள். அவற்றை மேற்கொள்ள முயற்சிக்கலாம்.
எடை ப்ளேட்யூ
உங்களின் உடல் எடை நீங்கள் எந்த முயற்சி செய்யும்போதும், குறையாமலே இருப்பது எடை ப்ளேட்யூ ஏற்பட காரணமாகிறது. உங்கள் உடல் நீங்கள் தற்போது கடைபிடிக்கும் பழக்கத்தை ஏற்பதில் தாமதம் ஏற்படும். அனைத்தும் தாமதமாகலாம். இதை தவிர்க்க உங்கள் உடல் பயிற்சியின் பழக்கம் மற்றும் உணவு முறை ஆகியவற்றை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள். அதிகப்படுத்துங்கள். புதிய உடற்பயிற்சிகளை அறிமுகம் செய்து உங்கள் உடல் எதை ஏற்கிறது என்று பாருங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்