தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss : நீங்கள் சரசரவென உடல் எடையை குறைக்கவேண்டுமா? இத்தனை தேநீர் இருக்கும்போது ஏன் கவலை?

Weight Loss : நீங்கள் சரசரவென உடல் எடையை குறைக்கவேண்டுமா? இத்தனை தேநீர் இருக்கும்போது ஏன் கவலை?

Priyadarshini R HT Tamil
Jul 10, 2024 02:02 PM IST

Weight Loss : நீங்கள் சரசரவென உடல் எடையை குறைக்கவேண்டுமா? இந்த தேநீரே அதற்கு உதவும்!

Weight Loss : நீங்கள் சரசரவென உடல் எடையை குறைக்கவேண்டுமா? இத்தனை தேநீர் இருக்கும்போது ஏன் கவலை?
Weight Loss : நீங்கள் சரசரவென உடல் எடையை குறைக்கவேண்டுமா? இத்தனை தேநீர் இருக்கும்போது ஏன் கவலை?

உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் தேநீர்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உடல் எடையை குறைக்க உதவும் மூலிகை தேநீர்கள்

மூலிகை தேநீர்கள், நம்மிடம் பல காலமாக புழக்கத்தில் உள்ள ஒன்றுதான். இவை சுவைக்காக மட்டுமல்ல இவற்றின் நற்குணங்களுக்காகவும் புகழ்பெற்றவை. இந்த தேநீர்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இந்த நன்மைகளுடன், இந்த தேநீர் உடல் எடையையும் குறைக்க உதவும். இந்த தேநீரை நீங்கள் பருகும்போது, அது உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது. அவை என்ன தேநீர் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கிரீன் டீ

கிரீன் டீ என்பது உடல் எடை குறைக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பானம் ஆகும். இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. குறிப்பாக கேட்சின்கள் உள்ளது. கிரீன் டீ, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. உடலில் கொழுப்பு எரிக்கும் திறனை அதிகரிக்கிறது. குறிப்பாக நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உடலில் உள்ள கொழுப்பை அதிகளவில் எரிக்கிறது. கிரீன் டீ, கொழுப்பு ஆக்ஸிஜனேற்றத்தை 17 சதவீதம் அதிகரிக்கிறது. அதன் மூலம் இது உங்கள் உடலின் கொழுப்பை அதிகளவில் குறைக்கிறது.

இஞ்சி தேநீர்

இஞ்சி, செரிமான உட்பொருட்கள் நிறைந்தது. உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. இதனால் அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது. இஞ்சியை உட்கொள்ளும்போது, வெப்பம் உருவாவது அதிகரிக்கிறது. இது பசி உணர்வைக் குறைக்கிறது. இது உங்கள் உடல் எடை குறைக்க உதவுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

துளசி தேநீர்

துளசி, இந்து மதத்தில் புனிதப்பொருளாகக் கருதப்படுகிறது. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. துளசியின் எண்ணற்ற மருத்துவ குணங்களால், அது கடவுளுக்கு படைக்கப்படும் பொருளாக இந்தியாவில் வைக்கப்பட்டுள்ளது. துளசியில் உள்ள அடாப்டோஜெனிக் குணம், அது உடல் எடையை மேலாண்மை செய்வதற்கு உதவுகிறது.

துளசி டீ மனஅழுத்தம் தொடர்பாக ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை, உடலில் கார்டிசால் அளவை சமப்படுத்துவதன் மூலம் குறைக்கிறது. துளசி மன அழுத்தத்தை குறைக்கிறது. உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை இயக்கத்தை அதிகரிக்கிறது.

செம்பருத்தி பூ டீ

செம்பருத்தி டீயின் கசப்பான சுவையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அது உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. செம்பருத்தி, உடல் எடையை குறைக்கவும், உடலில் கொழுப்பு சேருவதை தடுக்கவும் உதவுகிறது. உடல் எடையை மேலாண்மை செய்வதில், இதன் சிறந்த குணங்களுக்காக பரிந்துரைக்கப்படுகிறது.

பட்டை டீ

பட்டை டீ, ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. இது உங்களுக்கு பசிக்கும் உணர்வையும், அதிகம் சாப்பிடுவதையும் தடுக்கும். பட்டை, இன்சுலின் சென்சிட்டிவ் அதிகம் உள்ளது. இது உடலில் கார்போஹைட்ரேட் உடைக்கப்படும் செயலை குறைத்து, உடல் எடையை குறைக்க உதவும்.

புதினா டீ

புதினா டீயை நீங்கள் பருகும்போது அது உங்களுக்கு புத்துணர்ச்சியை மட்டும் கொடுக்கவில்லை. அது உங்களின் உடல் எடை குறைய கணிசமான அளவு உதவுகிறது. பசியை கட்டுப்படுத்துகிறது. புதினாவின் மணம், பசியைக் கட்டுப்படுத்தி, பசி உணர்வை குறைக்கிறது. இது நீங்கள் கலோரிகள் அதிகம் எடுத்துக்கொள்வதை தடுக்க உதவுகிறது.

டேன்டோலியன் எனப்படும் சீமை காட்டு முள்ளங்கி டீ

இதுகுறித்து அதிகம் யாருக்கும் தெரியாது. இது ஒரு மஞ்சள் நிற பூ பூக்கும் தாவரம் ஆகும். இந்த தேநீர் உங்கள் உடல் எடையை நன்றாக குறைக்க உதவுகிறது. இது இயற்கையில் சிறுநீர் பிரிப்பு வேலையை நன்றாக செய்யும். அதன் மூலம் உங்கள் உடலில் சேரும் தண்ணீர் எடையை குறைக்க உதவுகிறது. டேன்டேலியன் டீ, சிறுநீர் வெளியேறுவதை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் எள்ள கூடுதல் எடை மற்றும் வயிறு உப்புசத்தை குறைக்க உதவுகிறது.

சோம்பு

சோம்பு தேநீர், வயிறு உப்புசம் மற்றும் செரிமானத்தை அதிகரிக்கும் இந்திய பாரம்பரிய தீர்வு ஆகும். இது உடலில் இயற்கை முறையில் சிறுநீர் பிரிப்புக்கு உதவுகிறது. உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீர் மற்றும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. சோம்பு பசியைக் குறைக்க உதவுகிறது. மேலும் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தருகிறது. ஒட்டுமொத்த உடல் எடை குறைப்புக்கும் உதவுகிறது.