தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  எடைகுறைப்புக்கான எளிய இரவு உணவுகள்

எடைகுறைப்புக்கான எளிய இரவு உணவுகள்

I Jayachandran HT Tamil
Jun 08, 2022 01:56 PM IST

உடல் பருமனைக் குறைப்பதற்குச் சிரமப்படுபவர்களுக்காக சில இரவு உணவுகள் பற்றி இங்கு காணலாம்.

எடைகுறைப்புக்கான உணவுகள்
எடைகுறைப்புக்கான உணவுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

சரியான பயிற்சிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது, சத்தான உணவுகளை சாப்பிடுவது ஆகியவை உங்கள் உடல் பருமனைக் குறைக்கும். அது கஷ்டமாக இருந்தாலும் நம்புங்கள் உண்மையில் அவை ஒன்றும் அந்தளவுக்குச் சிரமான காரியங்கள் இல்லை.

இதை சமாளிக்கத் தொடங்கிவிட்டால் பின்னர் எடைக்குறைப்பு மிக எளிதாக மாறிவிடும்.

இருப்பினும் உடல் குறைப்புக்கான உணவுமுறைகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் இங்கு சில எளிய உணவுவகைகளை இங்கே வழங்குகிறோம்.

1. ஓட்ஸ் இட்லி

இதில் அதிக புரதச்சத்தும் குறைந்தளவு கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளன. எடை குறைப்பு உணவு வகைகளில் சிறந்த ஒன்று ஓட்ஸ் இட்லி.

வழக்கமான அரிசி மாவு இட்லியை விட அதிக ஊட்டச்சத்துக்கள் ஓட்ஸ் இட்லியில் உள்ளது.விதவிதமான சட்னிகளைத் தொட்டுக்கொண்டு சுவையாக இதை சாப்பிடலாம்.

2. முட்டை சாட்

புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் முட்டையில் நிறைந்திருக்கின்றன. வேகவைத்த முட்டைகளுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து சாப்பிடலாம். இந்த உணவு புதிய சுவையை அளிக்கும்.

3. கீட்டோ தேங்காய் சாதம்

கீட்டோ தேங்காய் சாதம் எளிய, நறுமணம் மிக்க, சுவையான உணவாகும். அரிசிக்குப் பதிலாக காளிபிளவரை வைத்து இந்த சாதத்தை தயாரிக்கலாம். உடல் எடையைக் குறைப்பதற்கு இது மிகவும் உதவும்.

4. வறுத்த காய்கறிகள்

பல விதமான காய்கறிகளை சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து சாப்பிடலாம். அத்துடன் காரசாரமான மசாலாக்களை சேர்த்தால் சுவை அதிகரிக்கும். வறுத்த காய்கறிகளைச் சாப்பிட்டால் வயிறு நிரம்பி பசி ஏற்படாமல் இருக்கும். அத்துடன் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தையும் தரும்.

5. எண்ணெய் இல்லா மீன்குழம்பு

எண்ணெய் சேர்க்காமல் செய்யப்படும் மீன்குழம்பில் ஆரோக்கியமான கொழுப்புகளும், குறைந்த கலோரிகளும் உள்ளதால் எடைகுறைப்புக்கு மிகவும் ஏற்றதாகும்.

இந்த மீன்குழம்பில் தேங்காய்ப்பால், புளி சேர்த்து சாதத்துடன் சாப்பிடலாம்.

6. வறுத்த காளிபிளவர்

இதில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. வறுப்பதால் காலிபிளவர் மொறுமொறுவென சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். இதன் வறுத்த வாசனை சுண்டியிழுக்கும்.

7. ஓட்ஸ் கிச்சடி

இந்தியாவில் எல்லாரும் விரும்பிச்சாப்பிடும் உணவு கிச்சடி ஆகும். ஓட்ஸ் உடன் பாசிப்பயறு, கேரட், பச்சைப்பயறு, தக்காளி, பச்சைமிளகாய், ஆலிவ் எண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதில் புரதச்சத்து நிறைந்திருக்கும்.

என்ன யோசிக்கிறீர்கள். சீக்கிரம் உங்கள் டயட் பிளானைத் தயாரித்து ஜமாய்ங்கள்!

WhatsApp channel