Weight Loss : மதியத்துக்கு முன் நீங்கள் செய்யவேண்டிய 10 விஷயங்கள்; உடல் எடை குறைய உதவுவதாக கூறப்படுகிறது!
Weight Loss : உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்திற்கு உதவும் குறிப்புக்களாக இங்கு கூறப்பட்டுள்ளவற்றை கடைபிடித்துப் பாருங்கள்.

அதிகாலையில் துயில் எழவேண்டும்
மிகவும் கண்டுகொள்ளப்படாத விஷயங்களுள் ஒன்று அதிகாலையில் துயில் எழுவது. ஆனால் அதிகாலையில் எழுவது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கும் பழக்கங்களுள் ஒன்றாகும். அதிகாலையில் எழுவது உங்கள் உடலை அந்த நாளை நீங்கள் சுறுசுறுப்புடனும், விறுவிறுப்பாகவும் துவங்க உதவுகிறது. உங்களுக்கு உடற்பயிற்சி செய்யவும், ஆரோக்கியமான உணவு உட்கொள்ளவும் தேவையான நேரத்தைக் கொடுக்கிறது. இதனால் உங்களின் ஆரோக்கியம் பெருகுகிறது.
காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீர் அல்லது இளஞ்சூடான தண்ணீர் பருகவேண்டும்
உங்கள் நாளை நீங்கள் நீர்ச்சத்துடன் துவங்கவேண்டும். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் பருகுவது உங்கள் உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. காலையில் உங்களுக்கு சாப்பிட வேண்டும் என்ற உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள உங்களைத் தூண்டுகிறது. நாள் முழுவதும் ஆரோக்கியம் கொடுக்கிறது.
காலையில் எழுந்தவுடன் புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காலை உணவு
காலையில் எழுந்தவுடன் புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காலை உணவு உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இதனால் நீங்கள் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. முட்டை, கிரீக் யோகர்ட், புரத ஸ்மூத்தி என நீங்கள் சாப்பிடும்போது, அது உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பசி ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்து, கொழுப்பு இழப்பை கட்டுப்படுத்துகிறது.
உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்
காலையில் கட்டாயம் உடற்பயிற்சி செய்யுங்கள். வேகமாக நடப்பது, யோகா, பலம் கொடுக்கும் யோகா பயிற்சிகள் என நீங்கள் செய்யலாம். இந்த பயிற்சிகள் உங்கள் உடலின் வளர்சிதையைத் தூண்டும், கலோரிகளை எரிக்கும். உங்களின் மனநிலையை மாற்றும். உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். நீங்கள் நாள் முழுவதும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்ள உதவுகிறது.
காலையிலே உங்கள் உணவை திட்டமிட்டவிடுங்கள்
காலையில் 10 நிமிடங்கள் ஒதுக்கி இன்று என்ன உணவு மற்றும் ஸ்னாக்ஸ் சாப்பிடவேண்டும் என்பதை முடிவு செய்துவிடுங்கள். முன்னரே நீங்கள் உணவு உட்கொண்டு விடுவது, உணர்ச்சிவசப்பட்டு அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கிறது. இது உங்களுக்கு சரிவிகித உணவை உட்கொள்ளவும் வழிசெய்கிறது. நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது உங்களின் சாப்பிடும் ஆர்வத்தைக் குறைத்து, உங்களின் உணவுத் தேர்வுகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.
மதிய உணவுக்கு முன்னர் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்
நட்ஸ்கள், பழங்கள் அல்லது காய்கறி சாலட் என நீங்கள் மதிய உணவுக்கு முன்னர், சிறிதளவு ஸ்னாக்ஸ் சாப்பிடவேண்டும். இது உங்களுக்கு மதிய உணவில் அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வதைத் தடுக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை பசியின்போது தவிர்த்தாலே நீங்கள் உடல் எடையை விறுவிறுவென குறைக்க முடியும்.
காலையில் சர்க்கரை கலந்த பானங்களை தவிர்க்கவேண்டும்
காலையில் சர்க்கரை கலந்த பானங்களை நீங்கள் கட்டாயம் தவிர்க்கவேண்டும். கலோரிகள் அதிகம் நிறைந்த காபிக்கு பதில் கருப்பு காபி, கிரீன் டீ அல்லது தண்ணீர் என மாற்றிக்கொள்ளுங்கள். இந்த மாற்றுகள், 100க்கணக்கிலான தேவையற்ற கலோரிகள் உங்கள் உடலில் சேர்வதைத் தடுக்கின்றன. இது உங்களுக்கு ஆரோக்கியமான நாளை துவங்க உதவுகிறது.
குறைவான டார்கெட் மற்றும் தினமும் நடைப்பயிற்சி
நீங்கள் தினமும் எத்தனை ஸ்டெப்ஸ்கள் நடக்கவேண்டும் என்பதை கணித்துக்கொள்ளுங்கள். அந்த அளவு நடந்துவிடுங்கள். அதற்கு உங்கள் வாட்ச் அல்லது மொபைலில் உள்ள ஆப்கள் உதவும். நாள் முழுவதும் நீங்கள் அதிகம் நடப்பது உங்களுக்கு அதிக கலோரிகளை எரிக்க உதவும். இது உங்களின் உடலுக்கு நாள் முழுவதும் பயிற்சியையும் தரும்.
தியானம்
மனநிறைவைப்பெறவேண்டுமெனில் நீங்கள் தியானம் செய்யவேண்டும். நன்றியைப் பழக வேண்டுமெனில், நீங்கள் அதற்காக சிறிது நேரம் ஒதுக்கவேண்டும். மனநிறைவுடன் நீங்கள் இருக்கும்போது, அது உங்களுக்கு மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. நீங்கள் அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கிறது. உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில், அது நீண்ட காலம் உங்களை உற்சாகப்படுத்துகிறது.
காலை நேரத்தில் திரை நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்
காலையில் டிவி அல்லது ஃபோன் என பரர்த்துக்கொண்டு காலை உணவை உட்கொள்ளக் கூடாது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் தேவை. இது உங்களுக்கு சாப்பிடும் அளவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கும். இது உங்களுக்கு உங்களின் உணவை முழுமையாக மகிழ்வுடன் உட்கொள்ள உதவும். இது உங்களின் செரிமானத்தை அதிகரிக்கும். உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்