Weight Gain : எச்சரிக்கை மக்களே! சரசரவென உடல் எடை அதிகரிக்கிறதா? தொள தொள தொப்பைக்கு காரணம் இதுதான்!
Weight Gain : எச்சரிக்கை மக்களே, சரசரவென உடல் எடை அதிகரிக்கிறதா, தொள தொள தொப்பைக்கு காரணம் இதுதான். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்
அதிக கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவான உணவு உட்கொள்வதாலும், பதப்படுத்தப்பட்ட துரித உணவுகள், சர்க்கரை அதிகம் நிறைந்த பானங்கள் மற்றும் அதிக கலோரிகள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதாலும், உடல் எடை அதிகரிக்கிறது. பல்வேறு காரணங்களால் உடல் எடை அதிகரிப்பது உங்களுக்கு பல்வேறு உபாதைகளையும் ஏற்படுத்துகிது.
உடல் செயல்பாடுகள் குறைவு
உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வாழ்க்கை முறை மற்றும் குறைவான அளவு உடற்பயிற்சியாலும், அது உங்கள் உடலில் பல கலோரிகளை குறைக்க உதவுகிறது. இதனாலும் உங்கள் உடலில் திடீரென உடல் எடை அதிகரிக்கிறது.
மரபணுக்கள்
மரபணுக்கள் மாறியிருந்தாலும், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் உடலில் கொழுப்பு சேர்வது அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் எடையும் அதிகரிக்கிறது. இதனால் பல சிரமங்கள் ஏற்படுகிறது.
மனஅழுத்தத்தால் சாப்பிடுவது
உங்களுக்கு அதிகளவு மனஅழுத்தம் ஏற்பட்டால், நீங்கள் அதிகம் உட்கொள்ளத் துவங்குவீர்கள் அல்லது ஆரோக்கியமற்ற உங்களுக்கு தேவையான உணவை எடுத்துக்கொள்வதால் அதுவும் உங்கள் உடல் எடை அதிகரிக்கச் செய்கிறது.
ஹார்மோன் சமநிலை
ஹைப்போ தைராய்டிசம் அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ரோம் போன்ற பிரச்னைகள் பெண்களின் உடலில் போதிய ஹார்மோன்கள் சுரக்காததால் ஏற்படுகிறது. இது உங்கள் உடலில் ஹார்மோன் சமநிலைக்கு இடையூறு செய்கிறது. இதனாலும் உடல் எடை அதிகரிக்கிறது.
உறக்கம் குறைவு
போதிய உறக்கம் இல்லாவிட்டால், அது உங்களின் பசி ஹார்மோன்களை பாதிக்கிறது. இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. இதனால் உங்களுக்கு பசி அதிகரித்து உங்கள் உடலின் எடையை அதிகரிக்கச் செய்கிறது.
மருந்துகள்
குறிப்பிட்ட சில மருந்துகள், குறிப்பாக மனஅழுத்த மருந்துகள், உளவியல் மருந்துகள் மற்றும் ஸ்ட்ராய்டுகள் உங்கள் உடலின் எடையை அதிகரிக்கச் செய்து, பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன.
அதிகம் சாப்பிடுவது
நீங்கள் அதிக கலோரிகள் நிறைந்த உணவை உட்கொள்ளும்போது, உங்கள் உடலின் தேவையைவிட அதிகம் உட்கொள்வதால் உங்களுக்கு அந்த அதிக கலோரிகள் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இதனால் உங்களின் உடல் எடை அதிகரிக்கிறது.
வயோதிகம்
உடல் வளர்சிதை மாற்றம் என்பது, வயோதிகத்துடன் தொடர்பு உடையது. இது உங்கள் உடலின் தசை இறுக்கத்தை குறைக்கச் செய்து எளிதாக நீங்கள் உடல் எடையை அதிகரிக்க காரணமாகிறது. இதனால் வயோதிகம் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் உடல் எடையும் அதிகரிக்கிறது.
மனஅழுத்தம்
நாள்பட்ட மனஅழுத்தம் உங்கள் உடலில் கார்ட்டிகால் என்ற ஹார்மோன் சுரப்பதை ஊக்குவிக்கிறது. இதனால், உங்கள் பசி அதிகரிக்கிறது. இதனால் இயற்கையாகவே நீங்கள் அதிக உணவு உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக அது வயிற்றுப்பகுதியில் கொழுப்பாகி தொப்பையாக மாறுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்