Chow Chow Kootu: கல்யாண வீட்டு சௌ சௌ கூட்டு.. கர்பிணிகளுக்கு மிகவும் நல்லது!
சௌசௌவில் ருசியான கூட்டு செய்யலாம். கல்யாண வீடுகளில் அதிகமாக பரிமாறப்படும் இந்த கூட்டு இட்லி, தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் ருசி அருமையாக இருக்கும்.
பொதுவாக சௌ சௌ என்றாலே பலருக்கு பிடிக்காது. காரணம் எப்போதும் சாம்பார் அல்லது பொரியல் என அடிக்கடி செய்கிறோம். ஆனால் சௌசௌவில் ருசியான கூட்டு செய்யலாம். கல்யாண வீடுகளில் அதிகமாக பரிமாறப்படும் இந்த கூட்டு இட்லி, தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் ருசி அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
சௌ சௌ
பாசிப்பருப்பு
கடலை பருப்பு
வெங்காயம்
பச்சை மிளகாய்
தக்காளி
மஞ்சள்தூள்
உப்பு
பூண்டு
பெருங்காயம்
மிளகாய் தூள்
கடுகு
உளுந்தம்பருப்பு
கடலை பருப்பு
சீரகம்
கறிவேப்பிலை
உப்பு
செய்முறை
ஒரு பெரிய சௌசௌவை தோல் நீக்கி நன்றாக கழுவி தேவையான அளவில் நறுக்கி குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தக்காளி பழத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 50 கிராம் அளவிற்கு பாசிப்பருப்பு மற்றும் 50 கிராம் அளவிற்கு கடலைப்பருப்பை ஒன்றாக சேர்த்து கழுவி குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதில் நான்கு பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சௌசௌ காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரும் வரை வேக விட வேண்டும்.
மிக்ஸி ஜாரில் ஒரு கப் தேங்காய் ஒரு பச்சை மிளகாய், அரை ஸ்பூன் மிளகாய் தூள், ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று விசில் வைத்து எடுக்கப்பட்ட காய் பருப்புடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விட விட வேண்டும்.
தண்ணீர் வற்றி கூட்டு பதத்திற்கு வரும்போது இப்போது ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு சேர்க்க வேண்டும். கடுகு வெடித்து வர ஆரம்பிக்கும் போது பத்து சின்ன வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் ஒரு கொத்து கருவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக கால் ஸ்பூன் பெருங்காய தூளை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த தாளிப்பை ஏற்கனவே இறக்கி வைத்துள்ள சௌசௌ கூட்டுடன் சேர்த்தால் சேட்டு நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் ருசியான சௌசௌ கூட்டு ரெடி இந்த கூட்டு சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும் மேலும் தோசை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம் ருசி அருமையாக இருக்கும்
சௌசௌ வின் நன்மைகள்
சௌசௌவில் நீச்சத்து அதிகமாக உள்ளது. குறைந்த அளவு கலோரிகளை கொண்டுள்ளது என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் பெரிய அளவிற்கு சௌசௌ உதவுகிறது.
கர்ப்பிணி பெண்களிடையே உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்க உதவுகிறது. சௌசௌவில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் சிறுநீரகங்களில் உள்ள கூடுதல் திரவங்களை அகற்றி அதன் மூலம் சிறுநீரகத்தின் கற்கள் உருவாகுவதை தடுக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.