Tamil News  /  Lifestyle  /  Ways To Correct Stomach Bloating

Stomach Bloating: வயிறு உப்புசம் - சரிசெய்வது எப்படி?

Marimuthu M HT Tamil
Jan 04, 2024 12:54 PM IST

வயிறு உப்புசத்தைச் சரிசெய்வது எப்படி என்பது குறித்துக் காண்போம்.

வயிறு உப்புசம்/p>
வயிறு உப்புசம்/p> (Unsplash)

ட்ரெண்டிங் செய்திகள்

சரியான நேரத்தில் உணவு உண்ணாமை, முறையற்ற உணவுப்பழக்க முறை, மன அழுத்தம், அதிகமாக உணவு உண்பது, மலச்சிக்கல், விரைவாக சாப்பிட்டு காற்றையும் சேர்த்து விழுங்குவது, மாதவிலக்கு போன்ற காரணங்களால் வயிற்றில் அஜீரணத்துடன் கூடிய வீக்கம் காரணமாக உப்புசம் ஏற்படுகிறது.

வயிறு உப்புசம் என்பது வயிற்றைச் சுற்றி வாயு உருவாகுவதால் உண்டாகும் அசெளகரியம் ஆகும். இது எதனால் ஏற்படுகிறது.

- தொற்று நோயால் உடல் பாதிக்கப்படும்போது வயிற்றைச் சுற்றி வீக்கம் உண்டாகலாம். உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு மலச்சிக்கல் ஏற்படும்போது, வயிற்றுப்பகுதியில் பருமனாக இருப்பதுபோல் உணர்வீர்கள்.

பால், உருளைக்கிழங்கு, பருப்பு, பாஸ்தா, முந்திரி,பீன்ஸ் ஆகியவற்றை உண்ணும்போது, உடலில் அதிகப்படியான வாயு உண்டாகி வயிற்று உப்புசத்தை உண்டு செய்யும்.

வயிற்று உப்புசத்தைச் சரிசெய்யும் வழிமுறைகள்:

  • சீரகத்தை நீரில் ஊறவைத்து சீரகத்தண்ணீர் குடிக்கும்போது வயிற்றில் ஏற்படும் உப்புசம் சரியாகும்.
  • ஃபாஸ்ட்புட் மற்றும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
  •  நீரில் புதினா இலைகளைப் போட்டு ஊறவைத்துவிட்டு அந்த நீரைகுடிக்கவும். பின், அந்த புதினா இலைகளை மென்று தின்பது நல்லது.
  •  வீட்டில் ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி, இஞ்சியினை சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்க வைத்து குடித்துவர நன்மை பயக்கும்.
  • அடிவயிற்றுப் பகுதியினை சுற்றி மசாஜ் செய்யதால் ஓரளவுக்கு உடனடி விடுதலை கிடைக்கும்.
  • சுடு நீரில் 20 நிமிடங்கள் வரை நீண்ட நேரம் குளியல்போட்டால் வயிற்று உப்புசத்தில் இருந்து தப்பிக்கலாம்.
  •  ஓம நீரை குடித்து வர வயிற்று உப்புசம் குறையும்.
  • வெற்றிலையில் உப்புசேர்த்து உண்டுவர வயிற்று உப்புசம் மெல்ல சரியாகும்.
  •  க்ரீன் டீ குடித்தால் வயிற்று உப்புசம் குறையலாம்.
  •  15 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சிசெய்தால் வயிற்று உப்புசத்தை சரிசெய்யலாம்.
  • பாலில் வெள்ளைப்பூண்டினைப் போட்டு நன்கு சுண்ட காய்ச்சி குடிக்க வயிற்று உப்புசம் சரியாகும்.
  • துளசி இலைகளை நீரில் ஊறவைத்து குடிக்கவும் வயிற்று உப்புசம் பிரச்னை நீங்கும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்