Water Issues : தமிழகத்தையும் தாக்கும் தண்ணீர் பற்றாக்குறை! என்ன செய்யலாம்? – நிபுணர்கள் கருத்து!-water issues water shortage affecting tamil nadu too what can be done expert opinion - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Water Issues : தமிழகத்தையும் தாக்கும் தண்ணீர் பற்றாக்குறை! என்ன செய்யலாம்? – நிபுணர்கள் கருத்து!

Water Issues : தமிழகத்தையும் தாக்கும் தண்ணீர் பற்றாக்குறை! என்ன செய்யலாம்? – நிபுணர்கள் கருத்து!

Priyadarshini R HT Tamil
Mar 23, 2024 10:33 AM IST

Water Issues : தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 நகர்புற, தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தீவிர குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

Water Issues : தமிழகத்தையும் தாக்கும் தண்ணீர் பற்றாக்குறை! என்ன செய்யலாம்? – நிபுணர்கள் கருத்து!
Water Issues : தமிழகத்தையும் தாக்கும் தண்ணீர் பற்றாக்குறை! என்ன செய்யலாம்? – நிபுணர்கள் கருத்து!

இதற்கு முன்னர் கூட 48 சதவீதம் தமிழக நகர்புறத்தில், கிடைக்கும் குடிநீரின் அளவு, சுற்றுப்புற தூய்மையில் பாதுகாப்பின்மை போன்ற பிரச்னைகள் இருந்துள்ளன.

தமிழகத்தில் அந்த 21 நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் பின்வருமாறு -

காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தாம்பரம், சேலம், தர்மபுரி, நாகர்கோயில், திருவாரூர், காரைக்குடி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, ஆவடி, வேலூர், தேனி, ஈரோடு, நாமக்கல், ராஜபாளையம், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி.

சென்னை நகரம், 2015ல் கடும் வெள்ளத்தை சந்தித்தாலும், அதற்கு அடுத்த ஆண்டே கடந்த 140 ஆண்டுகளில் சந்தித்திராத வறட்சியை சந்தித்தது. மேலும் 2019ம் ஆண்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 முக்கிய நீர்தேக்கங்களிலும், நீர் முற்றிலும் வறண்டு காணப்பட்டு,"Day Zero" நீர் பிரச்னை சென்னைக்கு ஏற்பட்டது.

தமிழகத்தில், நீர்வளத்துறையால், அடையாளம் காணப்பட்ட 1,943 குளங்களில் (Tanks) பெரும்பாலானவை, நகர்புற குப்பை கொட்டும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

பெரும்பாலான உள்ளூர் நகராட்சி அமைப்புகளில் (Urban Local Bodies)1-3 மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சில நாட்களில் தினமும், சில சமயம் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி,135 லிட்டர் அல்லது தலைக்கு ஒரு நாள் நீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என இருந்தும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், 65 லிட்டர் அல்லது தலைக்கு ஒரு நாள் என்று மட்டுமே நீர் விநியோகிக்கப்படுகிறது.

இதனால், வேறு வழியின்றி, பொதுமக்கள் தண்ணீர் லாரிகள், தனியார் நீர் விற்பனையாளர்கள், முறைப்படுத்தப்படாத நிலத்தடி நீர் போன்றவற்றை எடுத்து பயன்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இருப்பினும், தீவிர வெப்பநிலை மாறுபாடுகளின் காரணமாக வறட்சி ஏற்பட்டால், குடிநீர் கிடைப்பது மிகவும் அரிதாகிவிடும். குடிநீரின் தரமும் மோசமானதாகவும் இருக்கும் சூழலே இங்கு நிலவுகிறது.

Uncontrolled Non-Revenue Water (NRW) மூலம் நன்னீர் ஆதாரங்களும் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றன.

பசுமைப்பரப்பு (Tree Cover) அதிகமிருப்பது வெப்பத்தை கட்டுப்படுத்துவதுடன் (அதன் மூலம் நீர் ஆவியாதல் குறையும்) நீரை உள்ளிழுத்து வைக்கும் தன்மையையும் அதிகப்படுத்தும் என இருந்தாலும், உலக சுகாதார மையம் தனிநபர் ஒருவருக்கு, 9 சதுரமீட்டர் பசுமைப்பரப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தினாலும், தமிழகத்தில் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 21 நகர்புற உள்ளூர் அமைப்புகளில், 4 இடங்களில் மட்டுமே 1 சதுரமீட்டர் (சற்றுமேல்)/தலைக்கு, பசுமைப்பரப்பு உள்ளது.

Urban and Regional Development Plans Formulation and Implementation (URDPFI) வழிகாட்டுதலின்படி, நகர்புறங்களில் 12-18 சதவீத பசுமைப்பரப்பு இருக்க வேண்டும் என இருந்தாலும், கிருஷ்ணகிரியை தவிர்த்து (1.45 சதவீதம் பசுமைப்பரப்பு உள்ளது), மற்ற 20 இடங்களிலும், மொத்த பரப்பில் 1 சதவீதத்துக்கு கீழாகவே பசுமைப்பரப்பு உள்ளது.

வெள்ளம் மற்றும் முறையான வடிகால் வசதி இல்லாமை, கழிவுநீர் கலப்பது போன்றவற்றால், குடிநீரின் தரம் தமிழகத்தில் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

கழிவுநீர் வசதி உள்ள மூன்றில் ஒரு பகுதி உள்ளூர் நகர்புற இடங்களில், கழிவுநீர் வடிகால் வசதி 40 சதவீதத்துக்கும் கீழாகவே தமிழகத்தில் உள்ளது.

பாதுகாப்பற்ற குடிநீர் வசதி தொடர்ந்து தமிழகத்தில் நிலவி வருவதால், சுகாதார சீர்கேடுகள் நிகழ்வதும், இதனால்,பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு, அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் நோய்வாய்படுதலும், அதற்கென அதிகம் செலவழிக்கும் கட்டாயத்திலும் இருக்கும் சூழல் அதிகமாகி வருகிறது.

உலக தண்ணீர் நாளில் தமிழக நீர்நிலைகளை காக்கவும் (26 சதவீதம் ஈரநிலங்கள் இருக்கும் பகுதியில், பரந்தூர் விமான நிலையம் தேவையா?), ஆலைக்கழிவு, பூச்சிக்கொல்லி மற்றும் செயற்கை உரங்களின் பயன்பாடு, பிற செயற்கை வேதிப்பொருட்கள் நீர்நிலைகள் அல்லது நிலத்தடி நீரை அடைந்து, குடிநீர் மாசுபடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

(தமிழகத்தில் இருக்கும் நிலத்தடி நீரில்,77 சதவீத நீர் பயன்படுத்தப்படுகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. இது இந்த ஆண்டு தலைப்பான "Water for Peace"ஐ உறுதிசெய்யுமா?)

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.