எச்சரிக்கை மக்களே.. மஞ்சள் பால் குடிப்பதால் இத்தனை பிரச்சனை வருமா.. ஒவ்வாமை முதல் இரும்புச்சத்து குறைபாடு வரை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  எச்சரிக்கை மக்களே.. மஞ்சள் பால் குடிப்பதால் இத்தனை பிரச்சனை வருமா.. ஒவ்வாமை முதல் இரும்புச்சத்து குறைபாடு வரை!

எச்சரிக்கை மக்களே.. மஞ்சள் பால் குடிப்பதால் இத்தனை பிரச்சனை வருமா.. ஒவ்வாமை முதல் இரும்புச்சத்து குறைபாடு வரை!

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 08, 2024 05:00 AM IST

மஞ்சள் பால் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் இவற்றை அனைவரும் அருந்துவது நல்லதல்ல. அதேசமயம் மஞ்சள் கலந்த பாலை குடித்தால் சிலருக்கு பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

எச்சரிக்கை மக்களே.. மஞ்சள் பால் குடிப்பதால் இத்தனை பிரச்சனை வருமா.. ஒவ்வாமை முதல் இரும்புச்சத்து குறைபாடு வரை!
எச்சரிக்கை மக்களே.. மஞ்சள் பால் குடிப்பதால் இத்தனை பிரச்சனை வருமா.. ஒவ்வாமை முதல் இரும்புச்சத்து குறைபாடு வரை! (shutterstock)

மஞ்சள் பாலில் ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், இந்தப் பாலை குடிப்பதை சிலர் தவிர்க்க வேண்டும். மஞ்சள் பால் குடிப்பது சிலரின் ஆரோக்கியத்திற்கு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். எந்தெந்த நபர்கள் மஞ்சள் பால் குடிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தம் குறைவு

உயர் இரத்த அழுத்தம் மட்டுமல்ல, குறைந்த இரத்த அழுத்தமும் ஒரு பிரச்சனை. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மஞ்சள் பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் மஞ்சள் பால் இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கிறது. இது குறைந்த பிபி நோயாளிகளின் பிரச்சனைகளை அதிகரிக்கிறது. எனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

ஒவ்வாமை

சிலருக்கு மஞ்சள் பால் குடித்த பிறகு ஒவ்வாமை ஏற்படலாம். மஞ்சள் பால் குடித்த பிறகு உங்களுக்கு சொறி, அரிப்பு அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், அது உங்களுக்கு  சேரவில்லை என்று அர்த்தம். அவை உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் மஞ்சள் பால் குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். அல்லது குடிப்பதை முற்றிலுமாக நிறுத்துவது நல்லது.

பித்தப்பை பிரச்சனைகள் இருந்தால் மஞ்சள் பால் குடிக்க வேண்டாம். ஏனெனில் மஞ்சள் பித்த உற்பத்தியை செயல்படுத்துவதன் மூலம் பித்தப்பை பிரச்சனைகளை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், பித்தம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், மஞ்சள் பால் குடிக்கவே கூடாது.

இரும்புச்சத்து குறைபாடு

இரத்த சோகை என்பது பலருக்கு இருக்கும் பிரச்சனை. இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்தசோகையால் அவதிப்பட்டால் மஞ்சள் பால் குடிப்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில் மஞ்சள் பால் தினமும் குடிப்பதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. ஏனெனில் சில சமயங்களில் மஞ்சள், பாலில் உள்ள இரும்புச் சத்தை உறிஞ்சுவதில் குறுக்கிட்டும். உடலில் இரத்த இழப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில் ஏற்கனவே ரத்தசோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மஞ்சள் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள்

ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால் சர்க்கரை நோய் பிரச்சினை ஏற்படும். சிலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அப்படிப்பட்டவர்களும் இந்தப் பாலில் இருந்து விலகி இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மஞ்சள் பால் குடிக்கக் கூடாது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள், சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஏற்கனவே சர்க்கரை குறைவாக உள்ளவர்கள், மஞ்சள் பாலை தவிர்க்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.