எச்சரிக்கை பெண்களே! நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்றுகிறதா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  எச்சரிக்கை பெண்களே! நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்றுகிறதா?

எச்சரிக்கை பெண்களே! நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்றுகிறதா?

Priyadarshini R HT Tamil
Dec 30, 2024 12:12 PM IST

நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்றினால், அது புற்றுநோயாக இருக்கலாம்.

எச்சரிக்கை பெண்களே! நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்றுகிறதா?
எச்சரிக்கை பெண்களே! நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்றுகிறதா?

கருப்பை புற்றுநோய்

கருப்பை புற்றுநோய் என்பது கருப்பையின் திசுக்களில் உருவாகும் ஒன்றாகும். இது பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளுள் ஒன்று. கருப்பை என்பது இரண்டு சிறிய உறுப்புகள். இங்குதான் கருமுட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. இது 78 பெண்களில் ஒருவருக்கு ஏற்படுகிறது. எந்த வயதிலும் கருப்பை புற்றுநோய் ஏற்படலாம். இது 50 வயதுக்கு மேல் பொதுவான ஒன்றாக உள்ளது. கட்டி சிறியதாக இருக்கும்போது ஆரம்ப கட்டத்திலே கண்டுபிடிக்கப்பட்டால், 90 சதவீதம் குணமடைய வாய்ப்பு உள்ளது. ஆரம்ப கட்டத்திலே கண்டுபிடிப்பது உயிருடன் இருக்கும் காலத்தை நீட்டிக்கிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது கடைசி கட்டங்களிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது. வயிற்று வலி, உப்புசம், பசியின்மை, சிறுநீரில் மாற்றம் ஆகியவை அறிகுறிகளாக உள்ளன. கருப்பையை நீக்கியவர்களுக்குக்கூட கருப்பை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது உங்கள் ஃபெல்லோபியன் குழாய்களை தாக்குகிறது.

அறிகுறிகள்

இந்த அறிகுறிகள் அடிக்கடி ஏற்பட்டால் கவனம் தேவை. இது மாதத்தில் 12 முறைக்கு மேல் வந்தால், இது உங்களுக்கான எச்சரிக்கை அறிகுறியாகும்.

வயிறு உப்புசம்

வலி, இடுப்பு வலி, வயிற்றில் மென்மை

பசியின்மை, உணவு உட்கொண்ட பின்னர் வயிறு நிறைந்த உணர்வு

அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் சிறுநீர் அவசரமாக வருவது

செரிமானமின்மை

மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு

முதுகு வலி

சோர்வு

கடும் உடல் எடை குறைவு

மெனோபாஸ்க்கு பின்னரும் பிறப்புறுப்பில் ரத்தம் வருவது

ஆபத்து அதிகம் உள்ளவர்கள்

வயது.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். இரண்டு மார்பகங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

குடும்பத்தில் யாருக்கேனும் இருப்பது.

தாமதமாக மெனோபாஸ் ஏற்படுவது மற்றும் மாதவிடாய் விரைவில் வருவது இரண்டும் காரணமாகலாம்.

ஆபத்தை குறைப்பது எப்படி?

புகைப்பிடிப்பதை நிறுத்தவேண்டும்.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும்.

வீட்டில் யாருக்கேனும் இருந்தால், அதுகுறித்து முன்னரே எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை

ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன், ஆரம்ப காலத்தில் செய்யவேண்டும். இது கருப்பை புற்றுநோயை கண்டுபிடிக்கும். முக்கிய சிகிச்சையாக கீமோதெரபி மற்றும் அறுவைசிகிச்சைகள் உள்ளது. இந்த சிகிச்சைகள் பல்வேறு காரணிகளைக் உள்ளடக்கியது. புற்றுநோயின் நிலை மற்றும் அளவைப் பொறுத்து வேறுபடும். பொதுவான உடல் ஆரோக்கியம், பரவியுள்ள அளவு மற்றும் கட்டியின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தும் சிகிச்சை அமைகிறது. புற்றுநோய் வந்தபின்னர் உங்களின் ஆயுள் காலம் நீட்டிக்கப்படுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. இதில் உங்களுக்கு வந்த புற்றுநோயின் வகை மற்றும் நிலை ஆகியவற்றைப் பொறுத்து உள்ளது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.