Vitamin D deficiency: எச்சரிக்கை.. உங்கள் குழந்தைகளுக்கு இந்த பிரச்சனைகள் இருக்கா.. உடனே கவனியுங்கள்
வைட்டமின் டி குறைபாடு தூக்க பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. குழந்தைகள் இரவு முழுவதும் தூங்காமல் நீண்ட நேரம் விழித்திருப்பார்கள். அப்போதும் அவர்கள் சோர்வாகவே காணப்படுகின்றனர். நள்ளிரவுக்குப் பிறகு தூங்குவது போன்றவற்றைச் செய்கிறார்கள்.

வைட்டமின் டி நம் உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்து. எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. வலுவான எலும்புகள் மற்றும் வலுவான தசைகளுக்கு, உடலுக்கு நிறைய வைட்டமின் டி தேவைப்படுகிறது. வைட்டமின்-டி போதுமானதாக இருந்தால் மட்டுமே நம் உடல் கால்சியம் மற்றும் பாஸ்பேட்களை உணவில் இருந்து உறிஞ்சும். மீன் போன்ற உணவுகளில் வைட்டமின் டி இயற்கையாகவே உள்ளது. சூரிய ஒளி மூலம் போதுமான வைட்டமின் டியையும் பெறலாம். வைட்டமின் டி குறைபாடு பிரச்சயை குறிப்பாக குழந்தைகளுக்கு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் ரிக்கெட்ஸ் போன்ற எலும்பு பிரச்சனைகளுக்கு உள்ளாகும் சூழல் ஏற்படும். ஒரு குழந்தைக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறிய சில அறிகுறிகள் உள்ளன. உங்கள் பிள்ளைக்கு இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், அவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாக அர்த்தம்.
எலும்பு வலி
வைட்டமின் டி குறைபாடு உள்ள குழந்தைகள் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். தசைகள் மற்றும் எலும்புகள் வலியால் பாதிக்கப்படுவார்கள். குழந்தைகள் எப்போதும் சோர்வாகவே காணப்படுவார்கள். அவர்களின் எலும்புகள் பலவீனமாக உள்ளன. 24 மணி நேரமும் அவர்கள் சோர்வாக இருப்பார்கள். அவர்களால் எதிலும் கவனம் செலுத்த முடியாது.
வெளிறிய தோல்
நமது சருமத்தில் உள்ள கொலஸ்ட்ரால் சூரியக் கதிர்களில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி வைட்டமின் டி ஆக மாறுகிறது. இதனால் சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் டி குறைபாடு இருந்தால், சருமம் பிரகாசமாக இருக்காது. இது வெளிர் நிறமாக மாறும். வைட்டமின் டி குறைபாடு உடலில் இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் சருமம் வெளிறியதாகவும் இருக்கும்.