ஜிம்மிற்கு போகமால் எடையை குறைக்க வேண்டுமா? இதோ சில உதவிக்குறிப்புகள் உதவலாம்!
உடல் எடையைக் குறைப்பதற்காக பலர் ஜிம் செல்கிறார்கள், பலர் டயட் இருக்கிறார்கள். ஆனால் ஜிம்மிற்கு செல்ல முடியாதவர்களும் உடல் எடையை குறைக்க விரும்புகிறார்கள். வீட்டிலேயே உடல் எடையை குறைக்க சில உதவிக்குறிப்புகள் உள்ளன. இவை உங்களுக்கு எடை குறைப்பதில் உதவ வாய்ப்புள்ளது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம்.

அதிக எடை கொண்டவர்கள் எடையைக் குறைக்க பல்வேறு பயிற்சிகளைச் செய்வதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். சிலர் ஜிம்கள், உடற்பயிற்சிகள், உணவுமுறைகள் போன்றவற்றை நாடுகின்றனர். ஆனால் சிலர் ஜிம்மிற்குச் செல்லாமல் எடையைக் குறைப்பது எப்படி என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள், ஏனெனில் ஜிம்கள் போன்ற எடை இழப்பு முறைகள் விலை உயர்ந்ததாக இருக்கும். ஆனால் ஜிம்மிற்குச் செல்லாமலேயே எடையைக் குறைக்க முடிந்தால் அது மிகச் சிறப்பாக இருக்கும் அல்லவா? இதற்காக, உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
எடை இழக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயம் கலோரிகளில் கவனம் செலுத்துவதாகும், அதாவது உணவு, தினசரி இயக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் நீங்கள் உட்கொள்வதை விட அதிக கலோரிகளை எரிக்க வேண்டும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதிலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், எடை இழப்புக்கு ஜிம்மிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்காக, நடைபயிற்சி, உடற்பயிற்சிகள், யோகா போன்ற செயல்பாடுகள் மூலம் கலோரிகளை எரிக்கலாம். உடற்பயிற்சி மற்றும் எடை இழப்பு இரண்டும் நீண்டகால ஆரோக்கியத்திற்கு முக்கியம். எனவே, ஜிம் போன்ற முறைகளை விரும்பாதவர்கள் எடை குறைக்க பின்பற்ற வேண்டிய சில விசயங்களை காண்போம்.