எலும்பை இரும்பாக்க வேண்டுமா? இதோ இந்த உணவுகளை கையில் எடுங்க! கால்சியச்சத்து நிறைந்தது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  எலும்பை இரும்பாக்க வேண்டுமா? இதோ இந்த உணவுகளை கையில் எடுங்க! கால்சியச்சத்து நிறைந்தது!

எலும்பை இரும்பாக்க வேண்டுமா? இதோ இந்த உணவுகளை கையில் எடுங்க! கால்சியச்சத்து நிறைந்தது!

Priyadarshini R HT Tamil
Dec 09, 2024 10:06 AM IST

எலும்பை இரும்பாக்கும் இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

எலும்பை இரும்பாக்க வேண்டுமா? இதோ இந்த உணவுகளை கையில் எடுங்க! கால்சியச்சத்து நிறைந்தது!
எலும்பை இரும்பாக்க வேண்டுமா? இதோ இந்த உணவுகளை கையில் எடுங்க! கால்சியச்சத்து நிறைந்தது!

வலுவான எலும்புகளைப் பெறுவதற்கான கால்சியச் சத்துக்கள் கிடைக்கும் உணவுகள்

கீரைகள்

கீரைகளில் கால்சியச் சத்துக்கள் கிடைக்கும். பாலக்கீரை, காலே, கொலார்ட், முள்ளங்கி கீரை என அனைத்து கீரைகளிலும் கால்சியச்சத்துக்கள் உள்ளன. கீரைகள் கால்சியச் சத்துக்களை வழங்கும் முக்கிய உணவாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

பாதாம்

பாதாமில் கால்சியம் அதிகம் உள்ளது. ஒரு கைப்பிடியளவு பாதாமில் 75 மில்லி கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலுக்கு தேவையான மற்ற ஆரோக்கிய கொழுப்புக்கள் மற்றும், புரதம், மெக்னீசியம் ஆகிய சத்துக்களையும் கொடுக்கிறது. இதனால் உங்கள் எலும்புகள் வலுவாகிறது. பாதாம் கால்சியச்சத்துக்களை மட்டுமின்றி பல்வேறு சத்துக்களையும் உங்களுக்கு கொடுக்கிறது.

எள்

எள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் எள்ளில் 88 மில்லி கிராம் கால்சியச் சத்து உள்ளது. எனவே நீங்கள் எள்ளை சாலட்களில் தூவி சாப்பிடலாம். சூப்கள் அல்லது எள்ளு உருண்டை என உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால், அது உங்கள் உடலில் கால்சியச் சத்துக்களை அதிகரிக்கும்.

சால்மன்

சால்மன் உள்ளிட்ட கொழுப்பு மீன்களில் அதிகளவில் கால்சியச் சத்துக்கள் உள்ளன. இது உங்கள் உடலுக்குத் தேவையான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்களை வழங்குகிறது. இது உங்கள் இதயம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

சோயா பொருட்கள் மற்றும் டோஃபூ

சோயா பாலில் தாவர அடிப்படை கால்சியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் தாவர உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கும், பால் அலர்ஜி உள்ளவர்களுக்கும், சோயா பால் ஒரு சிறந்த கால்சிய மூலமாகும். ஒருமுறை நீங்கள் டோஃபூ சாப்பிடும்போது உங்களுக்கு 300 கிராம் கால்சியச் சத்துக்கள் கிடைக்கிறது. குறிப்பாக நீங்கள் சைவம் மட்டும் சாப்பிடும் நபர் என்றால், நீங்கள் இதைச் செய்யலாம்.

ஆரஞ்சுகள் மற்றும் பழச்சாறுகள்

ஆரஞ்சுகளில் வைட்டமின் சி சத்துக்கள் மட்டும் கிடையாது. ஆனால் அதிகளவில் கால்சியச் சத்துக்களும் உள்ளது. கூடுதலாக கால்சியச் சத்துக்கள் நிறைந்த ஆரஞ்சு பழத்தின் சாறு உங்களுக்கு கால்சியச் சத்துக்கள் கிடைக்கச் செய்யும் சிறந்த வழியாகும். நீங்கள் புத்துணர்வு பானத்துடன் கால்சியச் சத்துக்களையும் எடுத்துக்கொள்ளலாம்.

அத்திப்பழங்கள்

அத்திப்பழங்கள் இனிப்பானவை மட்டுமல்ல, ஆரோக்கியமானவையும் ஆகும். இதில் 120 மில்லி கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. 5 அத்திப்பழங்கள் சாப்பிட்டால் உங்களுக்கு தேவையான கால்சியச் சத்துக்கள் கிடைத்துவிடும். இதில் நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. கால்சியச் சத்துக்களை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். எனவே இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.