உங்கள் மூளையை ஷார்ப்பாக்க வேண்டுமா? அது மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 9 உணவுகள்! இதோ பட்டியல்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் மூளையை ஷார்ப்பாக்க வேண்டுமா? அது மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 9 உணவுகள்! இதோ பட்டியல்!

உங்கள் மூளையை ஷார்ப்பாக்க வேண்டுமா? அது மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 9 உணவுகள்! இதோ பட்டியல்!

Priyadarshini R HT Tamil
Dec 24, 2024 12:41 PM IST

உங்கள் மூளையை ஷார்ப்பாக்க என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

உங்கள் மூளையை ஷார்ப்பாக்க வேண்டுமா? அது மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 9 உணவுகள்! இதோ பட்டியல்!
உங்கள் மூளையை ஷார்ப்பாக்க வேண்டுமா? அது மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 9 உணவுகள்! இதோ பட்டியல்!

ஃபேட்டி ஃபிஷ்

இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. குறிப்பாக டிஹெச்ஏ அதிகம் இருக்கும். குறிப்பாக கொழுப்பு அதிகம் உள்ள சால்மன், மாக்ரீல் மற்றும் மத்தி மீன் போன்ற மீன்களில் உள்ள கொழுப்புகள் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இந்த ஆரோக்கிய கொழுப்புகள், உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளையின் இயக்கத்துக்கு உகந்தது. மனத்தெளிவை உருவாக்குகிறது.

கீரைகள்

கீரைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் லூட்டின், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. மூளையின் கூர்மையை அதிகரிக்கிறது. உங்களின் வயது அதிகரிக்கும்போது மனநிலையை மாற்றுகிறது.

முட்டை

முட்டையில் கோலைன்கள் அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் மூளை அசிட்டோசோலைன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது ஒரு நியூரோடிரான்ஸ்மிட்டர் ஆகும். இது உங்களின் மனநிலை, நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்வதில் முக்கியமானது.

வால்நட்கள்

இதில் அதிகளவில் ஆல்ஃபா லினோலிக் அமிலம் இதில் அதிகம் உள்ளது. இது ஒருவகை ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகும். வால்நட்ஸ்களில் பாதுகாக்கும் தன்மை அதிகம் உள்ளது. இது உங்கள் மூளையைப் பாதுகாக்கிறது. இது உங்கள் மூளையின் திறனையும், நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.

மஞ்சள்

பொன்னிறமான மசாலா, இதில் குர்குமின் உள்ளது. இது வீக்கத்துக்கு எதிரான ஆற்றலுடன் செயல்படும் ஒரு மசாலா ஆகும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலுக்கு நல்லது. குர்குமின் உங்களின் நினைவாற்றலை அதிகரிக்கிறது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. இது வயோதிகம் தொடர்பான நினைவாற்றல் இழப்பை அதிகரிக்கிறது. இது வயோதிகம் தொடர்பான பிரச்னைகளுக்கு பாதுகாப்பைக் கொடுக்கிறது.

பரங்கி விதைகள்

பரங்கி விதைகளில் மெக்னீசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள இரும்புச்சத்துக்கள், சிங்க் சத்துக்கள் மற்றும் காப்பர் ஆகிய சத்துக்கள் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நியூரோடிரான்ஸ்மிட்டர்களின் இயக்கம் மற்றும் மனத்தெளிவை உருவாக்குகிறது. இந்த மினரல்கள் உங்கள் கவனம், நினைவாற்றல் மற்றும் ஒட்டூமொத்த மூளை இயக்கத்தை மேம்படுத்துகிறது.

ப்ரோகோலி

ப்ரோகோலியில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. வைட்டமின் கே மற்றும் மற்ற உட்பொருட்கள், ப்ரோகோலியில் மூளை செல்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது செல்களை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் நினைவாற்றல் மற்றும் மனத்தெளிவை அதிகரிக்க உதவுகிறது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் ப்ளாவனாய்ட்கள், மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது உங்களின் மனநிலை மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.

ப்ளுபெரிகள்

ப்ளூபெரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. குறிப்பாக இதில் ஃப்ளாவனாய்ட்கள், ப்ளூபெரிகளை, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து மூளையைக் காக்கிறது. இது உங்களின் நியூரான்களிடையே தொடர்பை உருவாக்குகிறது மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது. உங்களின் கவனத்தை மேம்படுத்துகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.