வயிற்றுப் பகுதி கொழுப்பை உடனடியாக கரைக்க வேண்டுமா?
வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பு பலருக்கு பெரும் தொல்லையாக உள்ளது. இதை எவ்வளவு விரைவாக குறைக்க வேண்டும் என்பது பலருக்கு மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வரும் நிலையில், நீங்கள் சாப்பிடும் உணவு பழக்கத்திலிருந்து எப்படி சாத்தியமாக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

சிலர் உடலுக்கு தேவையான அளவை விட மிகக் குறைவான அளவு உணவை சாப்பிட்டால் போதும் வயிற்றுப் பகுதி கொழுப்பை குறைக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் ஆபத்தானது. ஏனென்றால் சில உணவுகளை நீங்கள் நன்றாக சேர்த்துக்கொண்டாலே உடல் எடையை குறைக்கலாம்.
முட்டையில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் குறைவான அளவில் கலோரிக்களும் உள்ளது. முட்டை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருப்பதால், வேறு எதையும் சாப்பிட தோன்றாது. இதனால் எடை குறைப்பும் மெதுமாக நிகழும்.
ஆப்பிளில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆப்பிள பசியை மட்டும் போக்குவது மட்டுமல்லாமல், உடல் எடையையும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. எனவே நாளொன்றுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.
அனைத்து விதமான கீரைகளிலும் வைட்டமின்களும், சைட்டோ கெமிக்கல் நிறைந்து உள்ளது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் நாள்தோறும் ஏதாவது கீரை வகைகளை சாப்பிட வேண்டும். மிக முக்கியமாக கீரை சாப்பிடுவதனால் உடலிலுள்ள கூடுதல் எடை குறையும்.
கிரீன் டீ உடலிலுள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. உடல் கழிவுகள் நீக்கப்பட்டு சுத்தமாக்கபடுவதால் எடை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இதுமட்டுமில்லாமல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்க உதவுகிறது.
முளை கட்டிய பயறு வகைகளை காலை உணவாக சாப்பிடலாம். இவை உடலுக்கு நன்மையை தருவதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
பழவகைகள் ஏதையேனும் எடுத்துக்கொள்ளலாம். இவை உடலிலுள்ள தண்ணீர் அளவை சீராக வைக்க உதவுகிறது. பழங்களில் உள்ள ஃபரக்டோஸ், இனிப்பு வகைகள் மீதான ஆர்வத்தை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது.

டாபிக்ஸ்