ஹெல்தியா உடல் எடையை குறைக்க வேண்டுமா.. இந்த 5 நல்ல பழக்கங்களுடன் உங்க நாளை தொடங்க பழகுங்க.. உற்சாகமா இருப்பீங்க!
உடல் எடையைக் குறைப்பதற்கான உங்கள் முயற்சிகளுக்கு உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி நிச்சயமாக உதவியாக இருக்கும், ஆனால் சில காலை பழக்கங்களும் இந்த முயற்சியில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உடல் எடையை குறைப்பது மற்றும் ஆரோக்கியமாக இருப்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் நிறைந்துள்ளன. சில நேரங்களில் நாம் சமூக ஊடகங்களில் எடை இழப்புக்கான புதிய தந்திரங்களைப் பார்க்கிறோம். மேலும் சில சமயங்களில் எடை குறைப்பு மற்றும் உடல் தகுதிக்கான வெற்றிக் கதைகளைப் பார்த்ததும் அல்லது படித்ததும் திகைத்துப் போவோம். ஆனால், சில நேரங்களில் அதிகப்படியான தகவல்கள் நம்மை இக்கட்டான நிலைக்குத் தள்ளும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க, கலோரிகளின் மீது ஒரு கண் வைத்திருப்பது மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம் என்பது உண்மைதான். ஆனால், இவை அனைத்தையும் சேர்த்து, உங்கள் வாழ்க்கைமுறையில் சில நல்ல பழக்கங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், அதிகரித்து வரும் உடல் பருமன் அபாயத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் எந்த காலைப் பழக்கங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
வெதுவெதுப்பான நீரில் தொடங்கவும்
உடல் பருமனுக்கு முக்கிய காரணம் மெதுவான வளர்சிதை மாற்றமாகும். உங்கள் மந்தமான வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த விரும்பினால், உங்கள் காலையை வெதுவெதுப்பான நீரில் தொடங்கவும். தினமும் காலையில் எழுந்தவுடன் ஒன்று முதல் இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால், வளர்சிதை மாற்றம் குறையாது. ஆயுர்வேதத்தின் படி, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து குடிப்பது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது.
உடற்பயிற்சியில் சமரசம் வேண்டாம்
ஒவ்வொரு நாளும் குறைந்தது 25 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் முக்கியம். காலை வேளையில் லேசான உடற்பயிற்சியுடன் தொடங்குவது உடலின் நெகிழ்வுத்தன்மையை பராமரிப்பது மட்டுமின்றி உடலில் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கிறது. ஜிம்மில் யோகா, ஓடுதல், அல்லது உடற்பயிற்சி செய்தல் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் உடற்தகுதியைப் பராமரிக்கலாம், நீங்கள் எதைச் செய்தாலும் அதைத் தவறாமல் செய்யுங்கள்.