மருந்துகளின்றி ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டுமா? இதுதான் சரியான வழி – மருத்துவர் கூறுவது என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மருந்துகளின்றி ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டுமா? இதுதான் சரியான வழி – மருத்துவர் கூறுவது என்ன?

மருந்துகளின்றி ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டுமா? இதுதான் சரியான வழி – மருத்துவர் கூறுவது என்ன?

Priyadarshini R HT Tamil
Nov 19, 2024 06:00 AM IST

மருந்துகளின்றி ஆரோக்கிய வாழ்வு வாழும் வழிகளாக திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் கூறுவது என்ன?

மருந்துகளின்றி ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டுமா? இதுதான் சரியான வழி – மருத்துவர் கூறுவது என்ன?
மருந்துகளின்றி ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டுமா? இதுதான் சரியான வழி – மருத்துவர் கூறுவது என்ன?

நம்மை நோய்கள் ஆளக்காரணம்

நம்முடைய தற்போதைய உணவு முறை மாற்றங்கள், தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் தான் தற்போதைய நோய்களுக்கு முழுக்காரணம் என்பதை இளைய தலைமுறையினர் கண்டிப்பாக உணரவேண்டும். இரவு 9 மணிக்கே உறங்கி காலையில் 6 மணிக்கு எழுச்திருக்கம் பழக்கம் மாறி, இரவு 12 மணியைக்கடந்தும் விழித்துக்கொண்டு, காலையில் 10 மணியைக் கடந்தும் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஓடி, ஆடி, குனிந்து, நிமிர்ந்து, நடந்து, ஏறி, இறங்கி என வேலை செய்வது மாறி, இன்று நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வது, இயந்திரங்கள் மீதி வேலையை செய்வதும், இருசக்கர மிதிவண்டி ஓட்டுதல் பழக்கம் மாறி, இருசக்கர எரிபொருள் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்ததும், உழைக்கும் நேரத்தில் உறங்குவதும், உறங்கும் நேரத்தில் உழைப்பதும், இயற்கை உந்தல்களான மலம், சிறுநீர், பசி, தூக்கம், வாயு, மூச்சு, கொட்டாவி, இருமல், தும்மல், பசி, தாகம், வாந்தி, கண்ணீர், விந்து உள்ளிட்டவைகளை அடக்குவதும், தினசரி உறக்கம் குறைவதும், தீராத மனக்கவலையும், தீராத மன அழுத்தமும், மன உளைச்சலும் மற்றும் பணக்கஷ்டமும், உணவுப் பொருட்கள், தின்பண்டங்களின் தரமின்மை, ரசாயன கலப்படங்களும், சுகாதாரமற்ற குடிதண்ணீரும் சுகாதாரமற்ற காற்றும், தரமற்ற மருந்துகளும் மருந்துகளில் கலப்படமும், தரமற்ற, தவறான சிகிச்சை முறைகள், தவறானவர்களால் அளிக்கப்படுவதும், துரித உணவுகளை அதிகமாக அடிக்கடி தொடர்ந்து சாப்பிட்டு வருவதும், தொடர் போதைப் பொருட்கள் பயன்பாடும், புகை மற்றும் மதுப் பழக்கம் அனைவரிடத்திலும் வேகமாக பரவி வருவதும், உடை கலாச்சார மாற்றங்களும், பல்வேறு வடிவ வண்ண காலணிகள் பயன்பாடுகளும், தரமற்ற அழகு சாதன பொருட்கள் பயன்பாடும், அதி தீவிர தொடர் பயன்பாடுகளும், தற்கால கைபேசி முதல் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் தீவிரமாக அனைவரும் தொடர்ந்து பயன்படுத்துவதும், தவறான உணவு உண்ணும் நேர மாற்றங்களும், உறங்கும் நேர மாற்றங்களும், அறுசுவை உணவு உண்ணாமல் ஒரே மாதிரியான உணவுகளையே தொடர்ந்து உண்பதும், மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையும் என பல்வேறு காரணங்களால், ஆரோக்கியம் அனைவரிடத்திலும் குறைந்து வருகிறது.

இவற்றை களைந்து,

உடல் வலிமை மிக்கவர்கள்

உடல் மற்றும் உள்ளம் தூய்மையுள்ளவர்கள்

சிறந்த சக்தி பெற்றவர்கள்

தேவர்கள்,

தேவரிஷிகளை நேரில் கண்டவர்கள்

தர்மம், வேள்வி இவற்றை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள்

தெளிவான புலன்களை உடையவர்கள்

காற்றைப் போன்ற வலிமை, வேகம், பராக்ரமம் படைத்தவர்கள்

அழகான பின் பகுதியை கொண்டவர்கள்

கவர்ச்சிகரமான உருவம், உடல் அமைப்பு உடையவர்கள்

தெளிவான சிந்தனையும், அறிவும், வளர்ச்சியும் பெற்றவர்கள்

உண்மை

நன்னடத்தை

இரக்கம்

கொடை

அடக்கம்

முறைதவறாதவர்கள்

தவம்

உபவாசம்

புலனடக்கம்

கடவுள் வழிபாடு கடைப்பிடிப்பவர்கள்

எவற்றை கைவிடவேண்டும்?

அச்சம், ஆசை, விரோதம், மோகம், பேராசை, சினம், வருத்தம், அகங்காரம், நோய், துக்கம், சோம்பல், களைப்பு, ஓய்ச்சல், சோர்வு, பிறர் பொருளை விரும்புதல் போன்றவற்றை அற்றவர்கள் நீண்ட ஆயுள்பெற்று 120 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்ததாக வரலாறு சொல்கிறது.

நல்லதை நினையுங்கள், நல்லதைச் செய்யுங்கள், நல்லதே நடக்கும், ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

மேற்கண்ட கருத்துக்களை உண்ணிப்பாக கவனத்தில் கொண்டு, படித்து, நோயின்றி வாழ முயற்சி செய்யுங்கள், வாழும் நாட்கள் முழுவதும் மருந்தின்றி வாழ முயற்சி செய்யுங்கள், நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ உறுதி கொள்ளுங்கள்.

உணவுதான் மருந்து. நம் வீட்டு சமையல் அறைதான் மருத்துவமனை என்பதையும் மறந்து விடாதீர்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.