Hemoglobin : ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கவேண்டுமா? ஒரே ஒரு ஜூஸ் போதும்! நோய் எதிர்ப்பும் கிடைக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hemoglobin : ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கவேண்டுமா? ஒரே ஒரு ஜூஸ் போதும்! நோய் எதிர்ப்பும் கிடைக்கும்!

Hemoglobin : ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கவேண்டுமா? ஒரே ஒரு ஜூஸ் போதும்! நோய் எதிர்ப்பும் கிடைக்கும்!

Priyadarshini R HT Tamil
Jan 17, 2025 04:15 PM IST

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்?

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கவேண்டுமா? ஒரே ஒரு ஜூஸ் போதும்! நோய் எதிர்ப்பும் கிடைக்கும்!
ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கவேண்டுமா? ஒரே ஒரு ஜூஸ் போதும்! நோய் எதிர்ப்பும் கிடைக்கும்!

ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்

பேரிட்சை பழம் – 2

உலர் திராட்சை – 2

பீட்ரூட் சிறியது – 1

கேரட் சிறியது – 1

செய்முறை

பேரிட்சை பழம் மற்றும் உலர்ந்த திராட்சை இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைத்துவிடவேண்டும்.

பின்னர் கேரட், பீட்ரூட் இரண்டையும் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து போதியளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, ஜூஸ் தயாரித்துக்கொள்ள வேண்டும். ரத்தம் அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புக்கும் உதவுகிறது. இதை நீங்கள் தினமும் 48 நாட்கள் தொடர்ந்து குடித்துவந்தால் உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

உங்கள் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதும் தடுக்கும். இந்த பானம் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். இதை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உங்களுக்கு நல்ல பலன் கிட்டும். ஆனால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.