உங்களின் செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கவேண்டுமா? காலையில் இந்த 9 பழக்கங்கள் உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்களின் செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கவேண்டுமா? காலையில் இந்த 9 பழக்கங்கள் உதவும்!

உங்களின் செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கவேண்டுமா? காலையில் இந்த 9 பழக்கங்கள் உதவும்!

Priyadarshini R HT Tamil
Dec 29, 2024 06:00 AM IST

செரிமானத்தை அதிகரிக்க வேண்டுமென்றால், நீங்கள் காலையில் எழுந்தவுடன் என்ன செய்யவேண்டும்?

உங்களின் செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கவேண்டுமா? காலையில் இந்த 9 பழக்கங்கள் உதவும்!
உங்களின் செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கவேண்டுமா? காலையில் இந்த 9 பழக்கங்கள் உதவும்!

ஆரோக்கியமான காலை உணவு

நார்ச்சத்துக்கள், ஆரோக்கிய கொழுப்புகள் மறறும் புரதம் நிறைந்த சரிவிகித காலை உணவு கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். முழு தானியங்கள், பழங்கள் மற்றும் நட்ஸ்கள் உங்களின் உடலின் வளர்சிதையை அதிகரிக்கும். மேலும் உங்களின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

நன்றாக சவிக்க வேண்டும்

நீங்கள் உணவை நன்றாக மென்று சாப்பிடும்போது, அது உங்கள் உணவை உடைக்கிறது. மேலும் அது சிறிய துண்டுகளாகிவிடுகிறது. இதனால் உங்கள் செரிமான மண்டலம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இது உங்களின் செரிமான பிரச்னைகளை ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது. இதனால் செரிமானமின்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கும்.

அதிகம் சாப்பிடாதீர்கள்

உங்களுக்கு தேவையான அளவு மட்டும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். அதிகம் சாப்பிட்டுவிடாதீர்கள். அரை வயிறு மட்டும் சாப்பிடுங்கள். இது உங்களுக்கு வயிறு உப்புசம், செரிமானமின்மை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளைப் போக்கும். பசிக்கு மட்டும் உண்ணுங்கள். அதிகம் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.

கார உணவுகளை தவிர்க்கவேண்டும்

காலையில் கார உணவுகளை சாப்பிடுவது உங்கள் வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். அது நெஞ்செரிச்சல், வயிற்று வலி மற்றும் மற்ற செரிமான கோளாறுகள் ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே காலையிலேயே காரமான உணவுகள் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.

துளசி டீ

துளசி தேநீர் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. இதில் செரிமான உட்பொருட்கள் அதிகம் உள்ளது. இதை நீங்கள் காலையிலே வெறும் வயிற்றில் பருகுவதால் அது உங்கள் வயிற்றுக்கு இதமளிக்கிறது. வயிறு உப்புசத்தைப் போக்குகிறது. உங்கள் வயிற்றில் அமில அளவை முறையாகப் பராமரிக்கிறது.

யோகா

யோகா போஸ்களை காலையில் நீங்கள் செய்யும்போது, பூனை போஸ், நாய் போஸ், பாலம் மற்றும் குழந்தை போஸ் ஆகியவற்றை காலையிலேயே நீங்கள் செய்யும்போது அது செரிமான எண்சைம்களை சுரக்கச் செய்கிறது. வயிறு உப்புசத்தைப் போக்குகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

அதிக தண்ணீர் பருகவேண்டும்

உங்கள் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டும். இது உங்கள் செரிமானத்தை அதிகரிக்கும். காலையில் எழுந்தவுடன் நீங்கள் தண்ணீரை பருகும்போது, அது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றுகிறது. இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்களின் உணவை உடைக்க உதவுகிறது.

மனஅழுத்தத்தைக் குறைக்க தியானம் பழகுங்கள்

உங்கள் செரிமானத்தை மனஅழுத்தம் பாதிக்கிறது. இது குடல் எரிச்சல், அமில எதிர்ப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. தியானத்தை நீங்கள் பழகும்போது, அது உங்களின் காலையை இதமாக்குகிறது. இதனால் உங்களின் செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது.

காலை உணவுக்குப்பின்னர் மென்னடை

காலையில் உணவு சாப்பிட்ட பின்னர் மென்னடை நடக்கும்போது, அது உங்களின் செரிமானத்தை தூண்டுகிறது. அது வயிறு மெத்தென்று இருக்கும் அசவுகர்யங்களைப் போக்குகிறது. இது ரத்த ஒட்டத்தை அதிகரிக்கிறது. இது செரிமான உறுப்புக்களை பாதுகாக்கிறது.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.