காடுபோல் அடர்ந்த தலைமுடியைப் பெறவேண்டுமா? இதோ ரோஸ் வாட்டரை இந்த 5 வழிகளில் பயன்படுத்துங்க!
தலைமுடி அடர்த்தியாக வேண்டுமா? அதற்கு ரோஸ வாட்டர் உதவும். எப்படி பயன்படுத்தவேண்டும்?
ரோஸ் வாட்டர் சருமம் மற்றும் தலைமுடிக்கு நல்ல நிவாரணி, இது உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. தலைமுடிக்கு ரோஸ் வாட்டர் ஒரு இயற்கை டானிக், இது தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. பொடுகைக் குறைக்கிறது. அமில அளவை சமப்படுத்துகிறது. எரிச்சலைப் போக்குகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சூழல் பாதிப்புக்களால் தலைமுடி சேதமடையாமல் காக்கிறது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், தலைமுடியின் வேர்க்கால்களில் ஏற்படும் எரிச்சலைப் போக்குகிறது. உங்கள் தலைமுடி உங்கள் கூந்தலுக்கு பளபளப்பையும், ஆரோக்கியத்தையும் தருகிறது. இதை நீங்கள் கூந்தலுக்கு வழக்கமாகப் பயன்படுத்தும்போது, கூந்தல் நுனியில் சேதம் ஏற்படுவதைத் தடுக்கிறது. தலைமுடி உடைவது மற்றும் வறட்சியைப் போக்கி, தலைமுடிக்கு இதமளிக்கிறது. பட்டுப்போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. தலைமுடிக்கு உபயோகிக்க நீங்கள் கீழ்கண்ட 5 வழிகளில் பயன்படுத்தலாம்.
தலைமுடியின் வேர்க்கால்கள்
ரோஸ் வாட்டரை உங்களை தலையில் ஊற்றி வேர்க்கால்களில் சேர்த்து மசாஜ் செய்யவேண்டும். இது உங்கள் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. உங்கள் தலைக்கு நீர்ச்சத்து மற்றும் வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது பொடுகு மற்றும் எரிச்சலைப் போக்குகிறது. வேர்க்கால்களில் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ரோஸ் வாட்டரை வைத்து மசாஜ் செய்வதால், அது உங்கள் தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இது தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, தலைமுடியிழப்பைக் குறைக்கிறது.
எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம்
ரோஸ் வாட்டரை எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், விளக்ணெண்ணெயுடன் கலந்து தலையில் தேய்க்கும்போது, அது உங்கள் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. ஆரோக்கியமான வேர்க்கால்களை உருவாக்குகிறது. பொடுகைக் குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் எண்ணெயின் நன்மைகளை மேம்படுத்துகிறது. தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
ரோஸ் வாட்டர ஸ்பிரே
ஒரு கப் ரோஸ் வாட்டரில்10 சொட்டுகள் எசன்ஷியல் எண்ணெய் (லாவண்டல் அல்லது மிளகு எண்ணெய்) சேர்த்து, ஸ்பிரேயரில் ஊற்றி, நன்றாகக் கலக்கி, உங்கள் வேர்க்கால்களில் ஸ்பிரே செய்துகொள்ளலாம். இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும். தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுத்து பாதுகாக்கும். இதை ஷாம்பு தேய்த்து குளிக்கும் முன்னர், தலைமுடிக்கு புத்துணர்ச்சியைத் தரும் ஒன்றாகப் பயன்படுத்தலாம்.
ஹேர் மாஸ்க்
ரோஸ் வாட்டரை தேன், தயிர் அல்லது அவகேடோவுடன் கலந்து தலையில் பூசி வைத்துவிட்டு, அரைமணி நேரம் கழித்து தலையை அலசலாம். இது உங்களுக்கு நீண்ட கருங்கூந்தல் வளரவும், தலைமுடியை வலுவாக்கவும், அழகிய முடிக்கும் உதவும்.
கடைசியாக தலைமுடியை அலச பயன்படுத்தலாம்
ரோஸ் வட்டாரை நீங்கள் ஷாம்பூ தேய்த்து குளித்த பின்னர், கடைசியாக அலசுவதற்கு பயன்படுத்தலாம். இதன் புத்துணர்வுதரும் மலரின் மணம், உங்கள் தலைமுடிக்கு நீர்ச்சத்தைக் கொடுப்பதுடன், அதை தக்கவைக்கவும் உதவும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் நீர்ச்சத்தை தலைமுடி தக்கவைத்துக்கொள்ள உதவும். இது தலைமுடியிர் சிக்குகள் ஏற்படாமல் தடுக்கும். மிருதுவான, பட்டு போன்ற கூந்தலைத் தரும். வளர்ச்சியை அதிகரிக்கும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்