தொங்கும் தொப்பையை தூக்கி வீச வேண்டுமா? இந்த ஒரு பானம் மட்டும் போதும்! காலை வெறும் வயிற்றில் பருக பலன் உறுதி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தொங்கும் தொப்பையை தூக்கி வீச வேண்டுமா? இந்த ஒரு பானம் மட்டும் போதும்! காலை வெறும் வயிற்றில் பருக பலன் உறுதி!

தொங்கும் தொப்பையை தூக்கி வீச வேண்டுமா? இந்த ஒரு பானம் மட்டும் போதும்! காலை வெறும் வயிற்றில் பருக பலன் உறுதி!

Priyadarshini R HT Tamil
Jan 03, 2025 11:16 AM IST

தொங்கும் தொப்பையை விரட்டும் பானம் என்னவென்று பாருங்கள்.

தொங்கும் தொப்பையை தூக்கி வீச வேண்டுமா? இந்த ஒரு பானம் மட்டும் போதும்! காலை வெறும் வயிற்றில் பருக பலன் உறுதி!
தொங்கும் தொப்பையை தூக்கி வீச வேண்டுமா? இந்த ஒரு பானம் மட்டும் போதும்! காலை வெறும் வயிற்றில் பருக பலன் உறுதி!

ஆனால் இயற்கை வழிகளிலும் உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு சில பானங்கள் உதவுகின்றன. அவை உங்கள் உடல் எடையை குறைப்பதுடன், உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கின்றன. அதில் ஒன்றை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

கருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன்

பட்டை – ஒரு துண்டு

கிராம்பு – 2

இஞ்சி – கால் இன்ச் டீ(இடித்தது)

எலுமிச்சை – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

மிளகுத் தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை

கருஞ்சீரகம், இஞ்சி, பட்டை, கிராம்பு ஆகிய 4 பொருட்களையும் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அது 100 மில்லியாக சுண்டும் வரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவேண்டும். பின்னர் அதை வடிகட்டி, அதில் ஒரு இரண்டு ஸ்பூன் எலுமிச்சை, சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து இளஞ்சூடாக வெறும் வயிற்றில் பருகி வர தொங்கும் தொப்பையும் காணாமல் போகும்.

இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். அல்சர் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரையைப் பெறறு பருகலாம். மற்றவர்கள் தாராளமாக பருக உங்கள் தொப்பை குறையும். இதனுடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சி கட்டாயம் தேவை.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.