பணியிடத்தில் உங்கள் உற்பத்தித் திறனை அதகரிக்கவேண்டுமா? இந்த 10 எளிய வழிகள் உதவும்!
பணியிடத்தில் உங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்க நீங்கள் இந்த வழிகளைப் பின்பற்றுங்கள்.
பணியிடத்தில் உங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டுமெனில், நீங்கள் பின்பற்றவேண்டிய எளிய வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். உங்களின் முழுத் திறனையும் பெறுவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள். உங்களுக்கு வேலைப்பளு அதிகம் உள்ளதா? ஆனால் உங்கள் பணிகளை செய்யவிடாமல் உங்களின் கவனம் சிதறுகிறதா? நீங்கள் சில சிறய மாற்றங்களை செய்தாலே போதும். இது உங்களின் முழுதிறமையையும் வெளிக்கொண்டு வருவதற்கு உதவும். உங்களின் ஒவ்வொரு துளி நேரத்தையும் வீணாக்காமல், உங்களை உழைப்பாளியாக்கும்.
உங்களின் வேலைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்
ஒவ்வொரு நாளும் உங்களின் வேலைகளை பட்டியலிடுங்கள். அதில் முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுங்கள். இது உங்களின் கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும். மேலும் உங்களால் காலக்கெடுக்களை நன்முறையில் எதிர்கொள்ள உதவும். உங்களுக்கு ப்ராஜெக்ட்கள் இருந்தால், அதை முதலில் செய்து முடியுங்கள். அடுத்து அவசரமில்லாத வேலைகளில் கவனம் செலுத்துங்கள்.
சரியான அளவு இடைவெளி எடுத்துக்கொள்வதை உறுதிசெய்யுங்கள்
உங்களின் மனதை ரீசார்ஜ் செய்யவேண்டுமெனில் நாள் முழுவதும் வேலைக்கு இடையே சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு ஒரு மணி நேர வேலைக்கு இடையிலும் ஒரு 5 நிமடம் நடைபயிற்சி செய்யுங்கள். இது உங்களின் மனதை அமைதிப்படுத்தும். உங்களின் கவனத்தை அதிகரிக்கும். இந்த இடைவெளிக்குப் பின் நீங்கள் பணிக்கு திரும்பும்போது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும்.
வேலை பகிர்வு
உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும்போது, நீங்கள் மற்றவர்களுக்கு வேலைகளை பகிர்ந்துகொடுங்கள். உங்களிடம் அதிக ப்ராஜெக்ட்கள் குவிந்து கிடக்கும்போது, உங்கள் குழு உறுப்பினர்கள் அதை கையாளட்டும். நீங்கள் பிரசன்டேஷன்களில் மட்டும் கவனம்செலுத்துங்கள்.
மீட்டிங்குகளில் உங்களின் திறனை அதிகரித்துக்கொள்ளுங்கள்
மீட்டிங்குகளை அதிக பயனுள்ளதாக மாற்றுங்கள். துவக்கத்திலே நிகழ்வுகள் குறித்து தயாரித்துவிடுங்கள். ஒவ்வொரு டாபிக்குக்கும் போதிய நேரத்தை ஒதுக்குங்கள். கலந்துரையாடவேண்டிய விஷயங்களை பட்டியலிடுங்கள். ஒவ்வொருவரும் கவனமுடன் மீட்டிங்கில் இருக்கவேண்டும். ஈமெயிலில் கூறிவிடுவதை அதிலே செய்து முடித்துவிடவேண்டும். அதற்காக மீட்டிங்குகள் வைக்கக்கூடாது. எனவே முக்கிய விஷயங்களை மட்டும் மீட்டிங்குகளில் விவாதிக்கவேண்டும்.
5 நிமிட விதியை பின்பற்றுங்கள்
தள்ளிப்போடுவதை மட்டும் எப்போதும் செய்யாதீர்கள். 5 நிமடம் எடுத்து அந்த வேலையை முடித்துவிடுங்கள். உங்களிடம் கூறுங்கள், நீங்கள் உங்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஏதாவது ஒன்றை உங்களிடம் கூறிக்கொள்ளுங்கள். இந்த சிறிய துவக்கம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
குறுகிய கால இலக்குகள்
நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய குறுகிய கால இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். இது உங்களின் கவனத்தை அதிகரிக்கும். உங்களை ஊக்குவிக்கும். அதாவது மதிய உணவு இடைவேளைக்குள் முடிக்கவேண்டிய வேலைகள், அடுத்து செய்யவேண்டியது என பட்டியலிட்டு, அதை முடித்தும்விடுங்கள். இவற்றை முடிக்கும்போது உங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும். மேலும் முன்னேறிச் செல்லவேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்.
டிஜிட்டல் காலண்டர் மற்றும் ரிமைண்டர்
நீங்கள் உங்களின் மொபைலில் உள்ள காலண்டரை உபயோகியுங்கள். அதில் மீட்டிங்குகள் மற்றும் காலக்கெடுக்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ரிமைண்டர்களை செட் செய்துகொள்ளுங்கள். முக்கிய டாஸ்குகள் அல்லது சந்திப்புகள் குறித்து நினைவூட்டலை செய்துவிட்டால் அவை உறுதியாக பின்பற்றப்படும். இதனால் உங்களுக்கு நல்லது நடக்கும். வேலைகளில் தொய்வுகள் இருக்காது.
பணியிடத்தில் சுத்தம்
உங்கள் பணியிடத்தை சுத்தமாகவும் ஒருங்கிணைத்து வைத்திருங்கள். நீங்கள் லேப்டாப்களை பயன்படுத்தினாலும் அல்லது பணியிடமாக இருந்தாலும் முறையான ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்களை உருவாக்குங்கள். ஒவ்வொரு ப்ராஜெக்ட்க்கும் ஒவ்வொரு ஃபோல்டர் என தனித்தனியாக உருவாக்கி, அதில் தேவையானவற்றை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் பணிகளை எளிதாக்கும். மேலும் உங்களின் ரெக்கார்கள் முறையாகப் பராமரிக்கப்படும். தேவைப்படும்போது தேவையானவற்றை எளிதாக எடுத்துக்கொள்ளமுடியும்.
கவனம் சிதறுவதை தவிருங்கள்
உங்கள் பணியிடத்தில் உங்களின் கவனத்தை சிதறடிக்கும் செயல்கள் எதுவென்று பாருங்கள். அதை கண்டுபிடித்து குறைக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையற்ற அறிவிப்புகள் வருவதை நிறுத்திவையுங்கள். அது கம்ப்யூட்டர் அல்லது ஃபோன் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது உங்களின் வேலையில் இருந்து கவனம் சிதறுவதைத் தடுக்கும். இதனால் உங்களால் வேலையில் கவனம்செலுத்த முடியும்.
வேலைகளை சிறப்பாக செய்து முடித்தபின் உங்களுக்கே பரிசு கொடுத்துக்கொள்ளுங்கள்
நீங்கள் எப்போதும் ஊக்கத்துடன் உழைக்கவேண்டுமெனில், உங்களுக்கு நீங்களே பரிசு கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளங்கள். உங்களுக்கு பிடித்த உணவோ அல்லது உடையோ அல்லது திண்பண்டங்களோ வாங்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கு சவாலான ப்ராஜெக்ட்டை முடித்துவிட்டு நீங்கள் இந்த வேலையை செய்தால் அது உங்களை மேலும் ஆனந்தததில் ஆழ்த்தும் செயலாக இருக்கும். இது உங்களின் சாதனைகளைக் கொண்டாடும் வழிகளுள் ஒன்றாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்