சருமம் பளபளக்கவேண்டுமா? உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்தியைத் தூண்டும் 9 உணவுகள் இவைதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சருமம் பளபளக்கவேண்டுமா? உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்தியைத் தூண்டும் 9 உணவுகள் இவைதான்!

சருமம் பளபளக்கவேண்டுமா? உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்தியைத் தூண்டும் 9 உணவுகள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Jan 10, 2025 11:13 AM IST

உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்தியை தூண்டும் உணவுகள் எவை?

சருமம் பளபளக்கவேண்டுமா? உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்தியைத் தூண்டும் 9 உணவுகள் இவைதான்!
சருமம் பளபளக்கவேண்டுமா? உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்தியைத் தூண்டும் 9 உணவுகள் இவைதான்!

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சுகள் மற்றும் எலுமிச்சையில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இது உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் ப்ரோலைன், ஹைட்ரோப்ரோலைனாக கொலாஜெனை மாற்றுகிறது. இது உங்கள் சரும ஆரோக்கியம், வலுவான சருமம் மற்றும் திசுக்களுக்கு மிகவும் உகந்தது.

தக்காளி

தக்காளியில் லைக்கோபென்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் சருமத்தை புறஊதாக் கதிர்களிடம் இருந்து காக்கிறது. இது உங்கள் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களை அதிகரிக்கிறது. உங்கள் சருமத்தில் உள்ள மீண்டெழும் திறனை அதிகரிக்கிறது. சருமத்துக்கு நெகிழ்தன்மையைக் கொடுக்கிறது.

பூண்டு

பூண்டில் சல்ஃபர் உள்ளது. இது உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது உங்கள் திசுக்களை சரிசெய்கிறது. இது உங்கள் உடலில் சுற்றுச்சூழல் உற்பத்தியால் பாதிக்கப்படும் கொலாஜென் உற்பத்தியை தடையை சரிசெய்கிறது.

பெரிகள்

ஸ்ட்ராபெரிகள், ப்ளூபெரிகள் மற்றும் ராஷ்பெரிகளில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளது. இது உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்தியை மட்டும் தடுக்கவில்லை. ராடிக்கல் சேதத்திடம் இருந்து காக்கிறது. உங்கள் சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது. சருமத்தின் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது.

மீன்

மீன்களில் ஒமேகா 3 உள்ளது. சால்மன், இறால், கெளுத்தி மீன் ஆகியவை உள்ளன. இது சருமத்தில் கொலாஜெனை பாதுகாக்கிறது. மீன் தோலும் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்க வைக்கும். ‘

முட்டையின் வெள்ளை கருக்கள்

முட்டையின் வெள்ளை கருக்களில் ப்ரோலைன் மற்றும் சல்ஃபர் போன்ற கொலாஜெனை உருவாக்கும் பொருட்கள் அதிகம் நிறைந்த ஒன்றாகும். இது சருமத்தை சரிசெய்கிறது. அதனுடன் தொடர்புடைய திசுக்களையும் வலுப்படுத்தி, மேம்படுத்துகிறது.

கீரை

பாலக்கீரை போன்ற கீரைகளில் உள்ள குளோரோஃபில்கள், கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. ஃப்ரி ராடிக்கல்கள்தான் சருமத்தை வறண்டுபோகச் செய்கின்றன. தொடர்புடைய திசுக்களையும் தாக்கி அழிக்கின்றன.

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், வால்நட்கள் மற்றும் சூரியகாந்தி விதைகள் ஆகிய அனைத்தும் சிங்க் மற்றும் காப்பரைக் கொடுக்கும். இதில் முக்கியமான மினரல்கள் உள்ளது. இது உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்திக்கு உதவுகிறது. சருமம், எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

எலும்பு சூப்

எலும்பு சூப்களை நீங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் உள்ள தண்ணீர் கொலாஜென், ஜெலட்டின் மற்றும் கிளிசரின் மற்றும் ப்ரோலைன் போன்ற அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. இவை மூட்டு ஆரோக்கியம், சருமத்தின் நெகிழ்தன்மை மற்றும் திசுக்களை நன்முறையில் பராமரிக்க தேவையானதாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.