டல்லான முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? அதற்கு இந்த மூன்று பொருட்கள் மட்டுமே போதுமானது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  டல்லான முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? அதற்கு இந்த மூன்று பொருட்கள் மட்டுமே போதுமானது!

டல்லான முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? அதற்கு இந்த மூன்று பொருட்கள் மட்டுமே போதுமானது!

Priyadarshini R HT Tamil
Updated Oct 27, 2024 01:13 PM IST

டல்லான முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? அதற்கு இந்த மூன்று பொருட்கள் மட்டுமே போதுமானது. உங்களுக்கு பொலிவான தோற்றத்தை தரும்.

டல்லான முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? அதற்கு இந்த மூன்று பொருட்கள் மட்டுமே போதுமானது!
டல்லான முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? அதற்கு இந்த மூன்று பொருட்கள் மட்டுமே போதுமானது!

காற்று, சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்களால் நமக்கு உடலிலும், சருமத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. பொலிவிழந்த முகத்தை பளபளப்பாக்க வேண்டுமா? இதோ நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

கார்ன் ஃப்ளார் – 2 ஸ்பூன்

தேன் – 2 ஸ்பூன்

பால் – 2 ஸ்பூன்

செய்முறை

கார்ன் ஃப்ளார், தேன், பால் என மூன்றையும் நீங்கள் ஒன்றாக கலந்துகொள்ளவேண்டும். நன்றாக கலந்துவிட்டு, உங்கள் முகத்தில் பூசி 20 நிமிடங்கள் காயவிடவேண்டும். காய்ந்தவுடன் முகத்தை நல்ல ஃபேஷ் வாஷ் போட்டு கழுவுங்கள். பொலிவிழந்திருந்த உங்கள் முகம் பளபயவென ஜொலிக்கும். இதை வாரத்தில் 4 நாட்கள் கட்டாயம் உபயோகிக்கவேண்டும். நீங்கள் வெயிலில் அதிகம் வெளியே செல்பவர் என்றால், இதை நீங்கள் வாரம் முழுவமே பயன்படுத்தலாம். ஆனால் கட்டாயமாக 7 நாட்கள் பயன்படுத்தவேண்டும். இது முகத்தின் பொலிவை அதிகரிப்பதுடன், முகத்தில் சுருக்கம், கருவளையங்கள், பருக்கள் தோன்றாமலும் பார்த்துக்கொள்ளும். நல்ல பலன் வேண்டுமென்றால் இரவில் உறங்கச் செல்லும் முன் இதை செய்துவிட்டு, நன்றாக உறங்கி காலையில் எழுந்தால் நன்றாக இருக்கும். எனவே கட்டாயம் செய்து பார்த்து பலன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.