Belly Fat Lose Tips: தொப்பையை குறைத்து தட்டையான வயிறு பெற வேண்டுமா? பிட்னஸ் பயிற்சியாளர் தரும் எளிய டிப்ஸ்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Belly Fat Lose Tips: தொப்பையை குறைத்து தட்டையான வயிறு பெற வேண்டுமா? பிட்னஸ் பயிற்சியாளர் தரும் எளிய டிப்ஸ்

Belly Fat Lose Tips: தொப்பையை குறைத்து தட்டையான வயிறு பெற வேண்டுமா? பிட்னஸ் பயிற்சியாளர் தரும் எளிய டிப்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 29, 2025 04:10 PM IST

Belly Fat: சர்க்கரை பானங்களைத் தவிர்ப்பது முதல் கலோரி குறைவான உணவுகள் வரை, தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து பிட்னஸ் பயிற்சியாளர் தரும் டிப்ஸ்களை பார்க்கலாம். உடற்பயிற்சிகள் இல்லாமல் உணவில் மாற்றங்கள் செய்யும் இதை முறையாக பின்பற்றினால் தட்டையான வயிற்றை பெறலாம் எனவும் கூறப்படுகிறது.

தொப்பையை குறைத்து தட்டையான வயிறு பெற வேண்டுமா? பிட்னஸ் பயிற்சியாளர் தரும் எளிய டிப்ஸ்
தொப்பையை குறைத்து தட்டையான வயிறு பெற வேண்டுமா? பிட்னஸ் பயிற்சியாளர் தரும் எளிய டிப்ஸ்

உடற்பயிற்சி, உணவு டயட் என இரண்டுமே கடைப்படிப்பதென்பது கடினமான விஷயம் தான். பெரும்பாலோனர் உடற்பயிற்சி செய்வதை விட, டயட்டை பின்பற்றி தொப்பை கொழுப்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதில் பலர் தோல்வியும் அடைகிறார்கள்.

ஆனால், உடல்பயிற்சி, உணவு டயட் என எதுவும் இல்லாமல் வயிற்றுப் பகுதி கொழுப்பை குறைத்து தட்டையான வயிறு பெறுவதற்கான சிறந்த வழிகள் ஏராளம் இருக்கின்றன. அந்த வகையில் பிரபல பிட்னஸ் பயிற்சியாளர் ஜினா அமீன், தட்டையான வயிறு பெறுவதற்கான சிறந்த வழிகளை பகிர்ந்துள்ளார்.

"வயிறு தசைகள் சமையலறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதால், தட்டையான வயிற்றை பெறுவதற்கு வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய வேண்டும், விடாமுயற்சியுடன் உடற்பயிற்சி செய்வது பரிந்துரைக்கப்பட்டாலும, ஒவ்வொருவரும் தாங்கள் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்களை நன்கு கவனித்து கொள்ள வேண்டும்" என்கிறார்

அதன்படி வயிற்று கொழுப்பைக் குறைத்து தட்டையான வயிற்றை அடைவது எப்படி என்பது குறித்த ஜினா அமீன் பகிர்ந்திருக்கும் டிப்ஸ்களை பார்க்கலாம்

கலோரிகள் குடிப்பதை தவிர்க்கவும்

வயிற்று கொழுப்பைக் குறைக்கும் பயணத்தில் செய்ய வேண்டிய முதல் விஷயமாக சர்க்கரையை குறைப்பது உள்ளது. ஆரோக்கியமான பச்சை சாறு, ஆல்கஹால் மற்றும் சில ஸ்மூத்திகள் உட்பட சர்க்கரை பானங்களை நீக்குவதாகும், ஏனெனில் அவை உங்களுக்கு எதையும் செய்யாது. உங்களை உடலுக்கு தேவையான ஆற்றலை நிரப்பாமல் விரைவாக கொழுப்புகளை சேர்க்கின்றன. தாகமாக இருந்தால் அல்லது ஏதாவது பருக வேண்டும் என விரும்பினால் கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள்

பகுதி கட்டுப்பாடு

உங்களுக்கு பிடித்த உணவுகளை நீங்கள் குறைக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நீங்கள் சமநிலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். உணவுகளில் சாப்பிட வேண்டிய அளவுகளில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாமல் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

கார்போஹைட்ரேட்டுகள் எதிரி அல்ல, ஆனால் ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு ஏற்றது போல் நீங்கள் சாப்பிடும் பகுதி அல்லது அளவு இருக்காதவாறு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு அரிசி, உருளைக்கிழங்கு அல்லது வேறு எந்த வகையான கார்போஹைட்ரேட்டையும் சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பாருங்கள்.

பற்றாக்குறையில் இருங்கள்

உங்கள் கொழுப்பு இழப்பு பயணத்தின் போது கலோரி பற்றாக்குறையான உணவை உட்கொள்வது மிக முக்கியம். பெரும்பாலும், நீங்கள் உட்கொள்வதை விட அதிகமாக கலோரிகளை எரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் நிலையான கலோரி பற்றாக்குறையை உருவாக்குங்கள்.

உங்கள் வயிறு கொழுப்பின் அடுக்கால் மூடப்பட்டிருக்கும். எனவே, நீங்கள் கலோரி பற்றாக்குறையில் எப்போதும் இருக்க வேண்டும்

மனப்பூர்வமாக சாப்பிடுங்கள்

பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் உணவுகளை நான்றாக மென்று மெதுவாக சாப்பிட வேண்டும். பசிக்காக மட்டும் சாப்பிட்டுவிட்டு திருப்தி அடையாமல், உங்கள் உடலை ஊட்டமளிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

வாழ்க்கை முறை மாற்றம்

மிக முக்கியமாக, இந்த மாற்றங்கள் அனைத்தும் தற்காலிகமானவை அல்ல. சிறந்த முடிவுகளை பெற நீங்கள் தவறாமல் இதை தொடர வேண்டும். உடற்பயிற்சி செய்வது, கார்டியோ செய்வது மற்றும் வலிமை பயிற்சி செய்வது ஆகியவை உங்களுக்கு ஒரு பற்றாக்குறைக்குள் இருக்க உதவும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் தோற்றமளிக்க விரும்பினால், இந்த வாழ்க்கை முறையை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும்.

பொறுப்புதுறப்பு: இந்தக் கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக அல்ல. மருத்துவ நிலை குறித்த ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.