Walnut Benefits : 40 வயதை கடந்த பெண்ணா? எனில் நீங்கள் தினமும் இந்த ஒரு நட் மட்டும் ஏன் எடுக்க வேண்டும்?
Walnut Benefits : 40 வயதை கடந்த பெண்ணா நீங்கள்? எனில் நீங்கள் தினமும் இந்த ஒரு நட் மட்டும் ஏன் எடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
ப்ரெஜெஸ்ட்ரோன்
இந்த ஹார்மோன் உடலில் இயற்கையாக சுரக்கக்கூடிய ஒரு ஹார்மோன் ஆனும். இது கர்ப்பத்துடன் தொடர்கொண்ட கருப்பைகளில் சுரக்கக்கூடிய ஒரு ஹார்மோன். இதை ஆய்வகங்களில் உருவாக்கலாம்.
இந்த ஹார்மோனின் அளவுதான் மாதவிடாயை பாதிக்கிறது. மெனோபாஸ் அறிகுறிகளையும் கொண்டு வருகிறது. கர்ப்பகாலத்தின் துவக்கத்தில் இந்த ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் குறைவாக சுரந்தால், அது உங்களுக்கு கர்ப்பத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும். பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.
கருப்பையில் கருமுட்டை உருவாக இந்த ஹார்மோன் பயன்படுகிறது. கரு உருவாகவில்லையென்றால், மாதவிடாயை ஏற்படுத்துகிறது. கரு உருவானால், கர்ப்பத்துக்கு உதவுகிறது.
பெண்ணின் மாதவிடாயின் மத்தியில் கருப்பை கருமுட்டையை வெளியிடும். அப்போது கருப்பையில் ப்ரெஜெஸ்ட்ரோன்கள் சுரக்கத் துவங்கும். கரு உருவாக இந்த ஹார்மோன் உங்களுக்கு உதவும்.
கருப்பையை உறுதியாக்கும்
மாதவிடாயில் உங்கள் உதிரப்போக்கை முறைப்படுத்தும்
கருத்தரித்தால், கர்ப்பத்துக்கு உதவும்
உங்கள் மனநிலையை மாற்றும்
தைராய்ட் இயக்கத்துக்கு உதவும்
பால் சுரப்புக்கு உதவும்
உங்கள் உடலில் ப்ரெஜெஸ்ட்ரோன் குறைவாக சுரந்தால்
மாதவிடாய் முறையின்மை
கருத்தரிக்க முடியாமை
மனநிலை மாற்றம், பயம், பதற்றம்
உறக்கமின்மை
ஆகிய பிரச்னைகள் ப்ரெஜெஸ்ட்ரோன் குறைந்தால் ஏற்படும். எனவே பெண்கள் அதற்கு என்ன செய்யவேண்டும்.
வால்நட்
நீங்கள் 40 வயதை கடந்த பெண் என்றால், நீங்கள் தினமும் ஒரு வால்நட்டை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
40 வயதில் பெண்களுக்கு தேவையான இந்த ஹார்மோன் எங்கிருந்து கிடைக்கும் என தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ப்ரெஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன்தான் உறக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் ஆகும்.
இந்த ஹார்மோனுக்கு உறக்கத்தை தரும் ஹார்மோன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. அது 40 வயதுக்கு மேல் பெண்களுக்கு கட்டாயம் தேவை. உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல உறக்கம் வேண்டும். ப்ரெஜெஸ்ட்ரோன் ஹார்மோன் தூக்கத்தை வரவைக்கும் என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எனவே உங்களுக்கு வழக்கமாக நட்ஸ் எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தால் போதும். தினமும் ஒரே ஒரு வால்நட் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். அதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்