நடைபயிற்சி : தினமும் 15 நிமிட நடைப்பயிற்சி உங்கள் உடலில் எத்தனை நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது பாருங்கள்!
நடைபயிற்சி : தினமும் 15 நிமிட நடைப்பயிற்சி உங்கள் உடலில் எத்தனை நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது பாருங்கள்!

நடைப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்
உடற்பயிற்சிகளிலே மிகவும் எளிதாக செய்யக்கூடிய பயிற்சி நடைபயிற்சிதான். இது மிகவும் சிறப்பான பயிற்சியும் கூட. நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் வேகமாக நடப்பது பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இது உங்கள் உடல் மற்றும் மனநிலையையும் மேம்படுத்துகிறது. நீங்கள் 15 நிமிடங்கள் தினமும் நடப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். இது உங்கள் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
தினமும் நடப்பது உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சிறிய நடைப்பயிற்சி கூட உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. 15 நிமிடங்கள் வேகமாக நடப்பது உங்களின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இதய நோய் ஏற்படும் வாய்ப்பை 30 சதவீதம் குறைக்கிறது.
மனநிலையை மாற்றி மன ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
நடைபயிற்சியின்போது உடலில் இருந்து எண்டோஃபின்கள் வெளியிடப்படுகிறது. இது இயற்கையாகவே உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக்கும் ஹார்மோன் ஆகும். நடைப்பயிற்சி உங்கள் மனநிலையை மாற்றும் என்றும், மனஅழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றை போக்கும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. உங்களின் மனஆரோக்கியத்தை அதிகரிக்க இது ஒரு எளிய வழி. இது உங்கள் நாளை நாள் முழுவதும் மகிழ்ச்சியாக்கும்.