தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Vivo V25 Pro Priced Under 40k Launched In India, Will Rival Oppo Reno 8 Pro And Nothing Phone (1)

Vivo V25 Pro: வண்ணங்கள் மாறும் பேக் கவர், 64 MP கேமரா! விலை எவ்வளவு தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 17, 2022 07:09 PM IST

பின்புறத்தில் வண்ணங்கள் மாறும் விதமாக அம்சம் கொண்ட Vivo V25 Pro போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் விவரக்குறிப்பு, விலை உள்பட இதர அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Vivo V25 Pro விலையும், சிறப்பு அம்சங்களும்
Vivo V25 Pro விலையும், சிறப்பு அம்சங்களும்

ட்ரெண்டிங் செய்திகள்

சேயிலிங் ப்ளூ, கருப்பு ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கும் இந்த போன்களில் மற்ற சிறப்பு அம்சங்களாக 64 MP OIS Night கேமரா, 120 Hz 3D Curve டிஸ்ப்ளே உள்பட சில புதிய விஷயங்கள் உள்ளன.

இதில் சேயிலிங் ப்ளூ நிறத்தில் வரும் போன்கள் மீது சூரிய ஒளி அல்லது யுவி ஒளி நீண்ட நேரம் பாய்ந்தால் கருப்பு நிறமாக மாறிவிடும். ஆனால் கருப்பு நிற போன்களுக்கு இந்த நிறமாற்றம் நிகழலாது.

Oppo Reno 8 Pro, Nothing Phone (1) மற்றும் Google Pixel 6a ஆகிய போன்களுக்கு போட்டியாக அதே விலை வரிசையில் Vivo நிறுவனத்தால் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Vivo V25 Pro போன்களின் விவரக்குறிப்புகள்

ஏற்கனவே குறிப்பிட்டு இருப்பது போல் Curved முன் பக்க டிஸ்ப்ளேயும், வண்ணங்கள் மாறக்கூடிய வகையில் பேக் கவரும் அமைந்துள்ளது. 6.53 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, Full HD+resolution, 120Hz Refresh rate வரையிலும், தரமாள காட்சி மற்றும் பிரவுசிங் அனுபவத்தை பெற 300 HZ டச் சாம்பிளிங் ரேட் கொண்டும் உள்ளது.

அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் விதமாக அமைந்திருக்கும் Refresh Rate, பயன்பாட்டுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்து கொள்ளலாம். டிஸ்ப்ளே உள்ள ப்ங்கர் பிரிண்ட் ஆப்ஷனும் அதற்கான சென்சாரும் உள்ளது.

போனின் செயல்பாட்டை பொறுத்தவரை, Mediatek Dimensity 1300 Processor, LPDDR4X RAM, விரைவான UFS 3.1 ஸ்டோரேஜ், நீட்டிப்பு செய்யும் விதமாக RAM 3.0 அம்சங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை 3 கேமராக்கள் முறையே 64 MP Main Camera, 8 MP Ultra Wide Camera, 2 MP Macro Camara ஆகியவற்றி பின் பகுதியிலும், செஃல்பி கேமரா 32MP கொண்டதாக அமைந்துள்ளது.

Vivo V25 Pro போன்களில் 4830 mAh பேட்டரி இணைக்கப்பட்டு, 66 W விரைவு சார்ஜிங் வசதியுடன் கூடிய சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12ஐ அடிப்படையாகக் கொண்ட FunTouch OS 12 இல் இயங்குகிறது.

Vivo V25 Pro விலை

இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தொடக்க விலையாக 8GB+128GB வேரியண்ட் ரூ. 35, 999 எனவும், 12GB+256GB வேரியண்ட் ரூ. 39, 999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் இந்த போன்கள் பிளிப்கார்ட் இணையத்தளத்திலும், Vivo இந்தியா இ-ஸ்டோர் மற்றும் பார்ட்னர் கடைகளிலும் கிடைக்கும்.

WhatsApp channel