Vitamin D Rich Foods : குளிர் காலத்தில் வெயில் குறைவதால் உடலில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு–அதற்கு உதவும் 9 உணவுகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vitamin D Rich Foods : குளிர் காலத்தில் வெயில் குறைவதால் உடலில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு–அதற்கு உதவும் 9 உணவுகள்!

Vitamin D Rich Foods : குளிர் காலத்தில் வெயில் குறைவதால் உடலில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு–அதற்கு உதவும் 9 உணவுகள்!

Priyadarshini R HT Tamil
Jan 20, 2025 11:10 AM IST

குளிர் காலத்தில் வைட்டமின் டி குறைபாட்டைப் போக்கும் உணவுகள் எவை?

Vitamin D Rich Foods : குளிர் காலத்தில் வெயில் குறைவதால் உடலில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு–அதற்கு உதவும் 9 உணவுகள்!
Vitamin D Rich Foods : குளிர் காலத்தில் வெயில் குறைவதால் உடலில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு–அதற்கு உதவும் 9 உணவுகள்!

முட்டை

முட்டை, அதிலும் குறிப்பாக மஞ்சள் கருவில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. ஒரு முட்டை உங்கள் உடலுக்கு குறைவான அளவு வைட்டமின் டியைக் கொடுத்து உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கும், எலும்பு ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

பால்

பாலில் அதிகளவில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. பல்வேறு பால் உற்பத்தி நிறுவனங்களும், அவர்களின் பால் பொருட்களில் வைட்டமின் டி சத்துக்களை சேர்க்கிறார்கள். இதனால் பால் உங்கள் உடலுக்கு சிறந்த உணவாகிறது. இதை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது சுவையான வைட்டமின் டி உணவாக மாறி, அதன் அன்றாட தேவையையும் பூர்த்தி செய்கிறது.

சீஸ்

பாலைப்போல், சில சீஸ்கள், குறிப்பாக ஸ்விஸ் சீஸ், சடார் சீஸ்களிலும் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. இதை நீங்கள் உங்கள் உணவுகளில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்துக்களைக் கொடுக்கிறது. குளிர் காலத்தில் குறிப்பாக சூரியனின் கதிர்கள் குறைவாகக் கிடைக்கும் நாட்களில் உங்களின் வைட்டமின் டி அளவுகளை பூர்த்தி செய்ய இவை உதவுகின்றன.

தயிர் அல்லது யோகர்ட்

தயிர் அல்லது யோகர்டில் அதிகளவில் ப்ரோபயோடிக்குகள் மட்டும் அதிகம் இல்லை. இவற்றில் வைட்டமின் டி சத்துக்களும் அதிகம் உள்ளன. குறிப்பாக அவை வலுவாக உள்ளன. இதனால் நீங்கள் தினமும் ஸ்னாக்ஸாக யோகர்ட் சாப்பிடலாம். ஸ்மூத்தியாகவும் எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் வைட்டமின் டி சத்துக்கள் அதிகரிக்க உதவுகிறது.

ஃபோர்டிஃபைட் உணவுகள்

பல தாவர அடிப்படையிலான உணவுகள், குறிப்பாக வலுவான பருப்புகள், தாவர அடிப்படையிலான பால் (சோயா, பாதாம் மற்றும் ஓட்ஸ் பால்), ஆரஞ்சு பழத்தின் சாறு ஆகியவற்றில் அதிகளவில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களுக்கு தேவையான வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்களைக் கொடுக்கிறது.

பேரிட்சை பழம்

பேரிட்சை பழத்தில் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இதில் குறிப்பிட்ட அளவு வைட்டமின் டி சத்துக்களும் உள்ளது. இதை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. குளிர் காலத்தில் சாப்பிடும்போது கூடுதல் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் டியையும் கொடுக்கிறது.

ட்ரை ஃப்ரூட்ஸ்

பாதாம், வால்நட் மற்றும் மற்ற ட்ரை ஃப்ரூட்களில் குறிப்பிட்ட அளவை வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. இவை எண்ணற்ற ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்களை உங்களுக்கு கொடுக்கின்றன. இதை நீங்கள் அதிகம் உட்கொள்ளும்போது, அது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. குறிப்பாக குளிர் காலங்களில் இது உங்களுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.

காளான்

குறிப்பிட்ட வகை காளான்களில், குறிப்பாக ஷிட்டேக் மற்றும் மைடேக் ஆகியவற்றில் இயற்கை வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. இது குறிப்பாக சூரிய ஒளி அல்லது புறஊதா கதிர்களில் படும்போது, இந்த இயற்கை வைட்டமின் டி கிடைக்கிறது. காளான்களில் அதிகளவில் தாவர அடிப்படையிலான வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது.

ஃபேட்டி ஃபிஷ்

ஃபேட்டி ஃபிஷ்களான சால்மன், கெளுத்தி மற்றும் மத்தி ஆகிய மீன்களில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இதனால் உங்களுக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்களைக் கொடுக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.