வைட்டமின் டி சத்துக்கள் : வைட்டமின் டி அதிகம் உள்ள சூப்பர் உணவுகள்; எவை என்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!
வைட்டமின் டி சத்துக்கள் : வைட்டமின் டி சத்துக்கள் அதிகம் உள்ள இந்த சூப்பர் உணவுகள் குறித்து தெரிந்துகொண்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

சூரிய ஒளியும் தேவை, இந்த வைட்டமின் டி அதிகம் உள்ள சூப்பர் உணவுகளைப் பாருங்கள். உங்கள் உடலுக்கு வைட்டமின் டி சத்துக்கள் தேவையென்றால் நீங்கள் சூரிய ஒளியில் குளிக்கவேண்டும். ஆனால், அதைவிடவும் இங்குள்ள உணவுகளில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் வைட்டமின் டி அளவை இயற்கையான முறையில் அதிகரிக்கச் செய்யும். அவை என்னவென்று பாருங்கள்.
சால்மன்
வைட்டமின் டி சத்துக்கள் இயற்கையாக அதிகம் உள்ள உணவுகளுன் சால்மன் மீன்கள் முதலில் உள்ளது. இது உங்கள் அன்றாட தேவையின் 65 சதவீத வைட்டமின் டி சத்துக்களைக் கொடுக்க வல்லது. இதில் ஒமேகா 3யும் உள்ளது. மேலும் இதில் தரமான புரதச்சத்துக்களும் உள்ளன.
ட்ரவுட் மீன்
ட்ரவுட் மீனில் சால்மன் மீனைவிட அதிகளவு வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. இது ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த நண்நீர் மீனாகும். இதில் ஆரோக்கிய கொழுப்புக்கள் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் அதிகம் உள்ளன.