Vitamin B 12 : ரத்த சிவப்பணுக்கள் வளரவும், நரம்பை இரும்பாக்கவும் இந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் தான் தேவை!
Vitamin B 12 : ரத்த சிவப்பணுக்கள் வளரவும், நரம்பை இரும்பாக்கவும் இந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் தான் தேவை!
பல்வேறு வகையான உடல் இயக்கத்துக்கு வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இதில் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நரம்பு ஆரோக்கியம், டிஎன்ஏ வளர்ச்சி மற்றும் ரத்த சிவப்புணுக்கள் உருவாக்க என உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் உதவுகிறது.
இது விலங்கு உணவுகளான இறைச்சி, பால்பொருட்கள் மற்றும் முட்டையில் தான் அதிகம் காணப்படுகிறது. அசைவத்தை எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் வைட்டமின் பி12 தேவைப்படும். அவர்களுக்கு சில தாவரங்களில் இருந்தும் இந்த சத்துக்கள் கிடைக்கிறது. அவை எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வைட்டமின் பி12 சத்துக்கள் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள்
காளான்
காளான் உங்கள் உணவில் கார சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் உணவு கிடையாது. இதில் அதிகளவில் வைட்டமின் பி12 சத்து உள்ளது. தாவர உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இது நல்ல தேர்வு. இதில் பல்வேறு நன்மைகளையும் உடலுக்கு அளிக்கிறது.
பீட்ரூட்
பீட்ரூட்டில் வைட்டமின் பி12 சத்து அதிகம் உள்ளது. இதன் நல்ல நிறம், நம்மை கவர்வதற்காக கிடையாது. இதில் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை நீங்கள் சாலட்கள் மற்றும் ஸ்மூத்திகள் மற்றும் காய்கறி அல்லது பழச்சாறுகளிலும் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் சருமத்துக்கும் நன்மை கொடுக்கிறது.
ஆப்பிள்
பழங்களில் வைட்டமின் பி12 சத்து அதிகம் இருக்காது. ஆனால் ஆப்பிளில் மிதமான அளவில் வைட்டமின் பி12 சத்து உள்ளது. அது உங்கள் உடலுக்கு சிறிதளவு நன்மையைக்கொடுக்கிறது. இதை நீங்கள் ஸ்னாக்ஸாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் நீங்கள் எண்ணெயில் வறுத்த உணவுகளை ஸ்னாக்ஸாக எடுத்துக்கொள்வது தடுக்கப்படுகிறது. இதை நீங்கள் பல உணவுகளுடனும், பழச்சாறுகளுடனும், ஃப்ரூட் சாலட்களுடனும் சேர்த்து சாப்பிடலாம். உணவுக்கு சுவையையும் உடலுக்கு ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.
கீரைகள்
கீரை, பல்வேறு உணவுகளிலும், பல்வேறு நாடுகளின் உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் கீரை பிரதான உணவு. இதில் இரும்புச்சத்து மட்டுமல்ல, இதில் சிறிதளவு வைட்டமின் பி12 சத்தும் உள்ளது. இதை நீங்கள் ஸ்மூத்தியாக தயாரித்து எடுத்துக்கொள்ளலாம். சாம்பார், கிரேவி, கூட்டு, பொரியல் என எதையும் செய்து சாப்பிடலாம். இது ஊட்டச்சத்து நிறைந்த உணவு எடுத்துக்கொள்வதற்கு சிறந்த தேர்வு.
ஆரஞ்ச்
ஆரஞ்சில் வைட்டமின் பி12 உள்ளது என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. ஏனெனில் இது வைட்டமின் சி உணவாக மட்டும் அதிகளவில் பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவை ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் அது உதவுகிறது. வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழம் சரிவிகித உணவுக்கு நல்ல தேர்வு. உங்களுக்கு தேவையான தினசரி ஊட்டச்சத்து அளவுகளை ஆரஞ்சு பூர்த்தி செய்கிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் வைட்டமின் பி12 சத்து அதிகம் இல்லை. ஆனால் இது உலகம் முழுவதும் இதன் பொட்டாசிய சத்துக்காக அதிகளவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உங்கள் உணவில் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வது உங்களுக்கு இனிப்பு சுவையை கொடுக்கிறது. மேலும், வைட்டமின் பி12 போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்குகள், இந்திய உணவுகளில் அதிகம் இடம்பெறும் ஒன்றாகும். குழந்தைகள் அதிகளவில் எடுத்துக்கொள்ளும் உணவாகவும் இது உள்ளது. இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் பி12 சத்தும் அதிகம் உள்ளது. இவற்றை நீங்கள் உணவில் எடுத்துக்கொண்டால், அது ஊட்டச்சத்து மற்றும் சுவை இரண்டையும் வழங்குகிறது.
காலிஃப்ளவர்
காலிஃப்ளவரில் மிதமான அளவு வைட்டமின் பி12 சத்து உள்ளது. மேலும் இதில் உடலுக்கு தேவையான மற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதை பிரியாணி, குருமா, வறுவல் என எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். இந்த காயை மேலும் சூப் உள்ளிட்ட நிறைய உணவுகள் செய்து சாப்பிடலாம்.
கேரட்
கேரட்டில் அதிகளவில் வைட்டமின் பி12 சத்துக்கள் இல்லாவிட்டாலும், இது இந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளது. இதில் பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் உங்களின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அது உங்களுக்கு சிறிதளவு வைட்டமின் பி12ஐயும் கொடுக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்