கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் குழம்பு; மிச்சம் வைக்காமல் தட்டு காலியாகும்! எப்படி செய்வது பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் குழம்பு; மிச்சம் வைக்காமல் தட்டு காலியாகும்! எப்படி செய்வது பாருங்கள்!

கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் குழம்பு; மிச்சம் வைக்காமல் தட்டு காலியாகும்! எப்படி செய்வது பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 19, 2024 07:00 AM IST

கிராமத்து ஸ்டைலில் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பாருங்கள்.

கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் குழம்பு; மிச்சம் வைக்காமல் தட்டு காலியாகும்! எப்படி செய்வது பாருங்கள்!
கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் குழம்பு; மிச்சம் வைக்காமல் தட்டு காலியாகும்! எப்படி செய்வது பாருங்கள்!

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் – 5

கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்

வேர்க்கடலை – ஒரு ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

வெள்ளை எள் – ஒரு ஸ்பூன்

வரமல்லி – 2 ஸ்பூன்

வர மிளகாய் – 15 முதல் 15எ

வெந்தயம் – அரை ஸ்பூன்

முந்திரி பருப்பு – 5

தேங்காய் – அரை கப்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

கடுகு – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

பூண்டு – 10 பல்

சின்ன வெங்காயம் – 10 முதல் 15

தக்காளி – 2

குழம்பு மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்

புளி – எலுமிச்சை பழஅளவு

(சூடான தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, மிளகு, சீரகம், வர மிளகாய், வரமல்லி, வெள்ளை எள், தேங்காய் சேர்த்து நன்றாக வாசம் வரும்படி வறுத்துக்கொள்ளவேண்டும். வறுத்த அனைத்தையும் ஆறவைத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

கத்திரிக்காயை நன்றாகக் கழுவி, சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும். நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த மசாலாவில் சிறிதளவு எடுத்து கத்திரிக்காயின் உள்பக்கம் நன்றாகப் படுமாறு தடவி கலந்து வைக்கவேண்டும். ஒரு கடாயில் சேர்த்து சூடானவுடன் அதில், மசாலாவில் தோய்த்த கத்திரிக்காயை எண்ணெயில் பொறித்து எடுக்கவேண்டும். 5 நிமிடங்கள் எண்ணெயில் பொரித்தெடுத்தால் போதும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்றாக மசிந்து வரும் வரை வதக்கவேண்டும். 

தேவையான அளவு குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதத்கிக்கொள்ளவேண்டும். அடுத்து புளி கரைசலை சேர்க்கவேண்டும். உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

அடுத்து எண்ணெயில் வதக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயை அதில் சேர்த்து, மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு, அதில் மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை தூவி இறக்கவேணடும். இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இதற்கு அப்பளம் மற்றும் வத்தலே போதிய சைட்டிஷ்களாகும். இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். குறிப்பாக கத்தரிக்காயே பிடிக்காது என்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். நீங்கள் செய்த இந்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை சாப்பிடுபவர்கள் கட்டாயம் உங்களிடம் ரெசிபி கேட்பார்கள். அத்தனை சுவை நிறைந்ததாக இந்த கத்தரிக்காய் குழம்பு இருக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.