Village New Bridegroom Drink : ‘புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரி’ கிராமத்து புது மாப்பிளை பானம்! என்ன செய்யும் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Village New Bridegroom Drink : ‘புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரி’ கிராமத்து புது மாப்பிளை பானம்! என்ன செய்யும் தெரியுமா?

Village New Bridegroom Drink : ‘புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரி’ கிராமத்து புது மாப்பிளை பானம்! என்ன செய்யும் தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Updated Oct 04, 2024 11:42 AM IST

Village New Bridegroom Drink : ‘புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரி’ கிராமத்து புது மாப்பிளை பானம் கேள்விப்பட்டு இருக்கிறீர்கள். என்ன செய்யும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Village New Bridegroom Drink : ‘புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரி’ கிராமத்து புது மாப்பிளை பானம்! என்ன செய்யும் தெரியுமா?
Village New Bridegroom Drink : ‘புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரி’ கிராமத்து புது மாப்பிளை பானம்! என்ன செய்யும் தெரியுமா?

தேவையான பொருட்கள்

பாதாம் பிசின் – சிறிதளவு (ஓரிரவு ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

பாதாம் – 4

அத்திப்பழம் – 1

பேரிட்சை பழம் – 1

பிஸ்தா – 4

வெள்ளரி விதை – ஒரு 1பூன்

ஏலக்காய் – 1

ஜாதிக்காய் – சிறிதளவு

கசகசா – கால் ஸ்பூன்

தேன் – 2 ஸ்பூன்

பால் – ஒரு டம்ளர்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

(வால்நட் மற்றும் முந்திரியை உங்களுக்கு தேவையென்றால் சேர்த்துக்கொள்ளவேண்டும். தலா 4 எடுத்துக்கொள்ளலாம்)

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அத்திப்பழம், பேரிச்சை, பாதாம், பிஸ்தா, வெள்ளரி, ஏலக்காய், ஜாதிக்காய், கசகசா (எடுத்திருந்தால் முந்திரி, வால்நட்) என அனைத்தையும் சேர்த்து 10 மணி நேரம் ஊறவிடவேண்டும்.

பாதாம் பிசினும் அதே அளவு நேரம் ஊறவேண்டும்.

நன்றாக ஊறிய நட்ஸ் வகைகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவேண்டும். பாதாமை மட்டும் தோல் நீக்கிவிடவேண்டும். பாலை நன்றாக மஞ்சள் தூள் சேர்த்து சுண்டக்காய்ச்சிக்கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் இதில் குங்குமப்பூவை சேர்த்துக்கொள்ளலாம்.

பாலில் இரண்டு ஸ்பூன் அரைத்த விழுது, தேன் இரண்டு ஸ்பூன், பாதாம் பிசின் இரண்டு ஸ்பூன் என சேர்த்து கலந்து தினமும் இரவு உறங்கச் செல்லும் முன்னும், காலையில் எழுந்தவுடனும் பருகவேண்டும்.

தினமும் இருவேளை பருகுவது உங்கள் உடல் பாலியல் இன்பத்தால் இழக்கும் ஆற்றலை மீட்கச் செய்யும். இந்த பானத்தை பருகுவதால் உங்களின் செக்ஸ் திறன் மட்டுமல்ல உடலுக்கு வேறு பல நன்மைகளும் கிடைக்கின்றன. எனவே திருமணமான மாப்பிள்ளைகள் இந்த பானத்தை கட்டாயம் பருகி பலன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புக்கள், அழகு குறிப்புகள் என ஹெச்.டி. தமிழ் உங்களுக்கு பல தகவல்களை வழங்கி வருகிறது. இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம். இதுபோன்ற எண்ணற்ற தகவல்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.