Vendhaya Keerai : வயிற்று புண் அவதியா.. இந்த கீரையில் கூட்டு செஞ்சு சாப்பிடுங்க.. கல்லீரலை பலப்படுத்தும்.. ரெம்ப நல்லது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vendhaya Keerai : வயிற்று புண் அவதியா.. இந்த கீரையில் கூட்டு செஞ்சு சாப்பிடுங்க.. கல்லீரலை பலப்படுத்தும்.. ரெம்ப நல்லது!

Vendhaya Keerai : வயிற்று புண் அவதியா.. இந்த கீரையில் கூட்டு செஞ்சு சாப்பிடுங்க.. கல்லீரலை பலப்படுத்தும்.. ரெம்ப நல்லது!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Oct 04, 2024 06:20 AM IST

Vendhaya Keerai : தோசை மாவில் வெந்தயகீரை, வெங்காயம் சேர்த்து தோசை சுட வைத்தால் கொலஸ்ட்ரால் குறைவதுடன் உடல் ஆரோக்கியமும் நிச்சயம் கிடைக்கும். அதேபோல் வெந்தயக்கீரையில் பருப்பு போட்டு செய்து குழந்தைகளுக்கு தரலாம். இங்கு வெந்தய கீரையை பருப்பு போட்டு சூப்பராக கூட்டு செய்யலாம்.

Vendhaya Keerai : வயிற்று புண் அவதியா.. இந்த கீரையில் கூட்டு செஞ்சு சாப்பிடுங்க.. கல்லீரலை பலப்படுத்தும்.. ரெம்ப நல்லது!
Vendhaya Keerai : வயிற்று புண் அவதியா.. இந்த கீரையில் கூட்டு செஞ்சு சாப்பிடுங்க.. கல்லீரலை பலப்படுத்தும்.. ரெம்ப நல்லது!

இந்த வெந்தயத்தை சாப்பிட வைக்க சில சுவையான செய்முறை வழிகள் உள்ளன. தேவையான அளவு வெந்தய கீரை எடுத்து நறுக்கி, சப்பாத்தி செய்வதற்குக் கலந்துள்ள மாவில் சேர்த்து சப்பாத்தி செய்யவும். அல்லது தோசை மாவில் வெந்தயகீரை, வெங்காயம் சேர்த்து தோசை சுட வைத்தால் கொலஸ்ட்ரால் குறைவதுடன் உடல் ஆரோக்கியமும் நிச்சயம் கிடைக்கும். அதேபோல் வெந்தயக்கீரையில் பருப்பு போட்டு செய்து குழந்தைகளுக்கு தரலாம். இது அவர்களுக்கு மிகவும் நல்லது. இங்கு வெந்தய கீரையை பருப்பு போட்டு சூப்பராக கூட்டு செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

வெந்தயக்கீரை பருப்பு கூட்டு தேவையான பொருட்கள்

வெந்தயக்கீரை- 1 கட்டு

பாசிப்பருப்பு - 75 கிராம்

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 1

பூண்டு - 4

சீரகம் - 1ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

வர மிளகாய் -2

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - 2 கொத்து

எண்ணெய் - 2 ஸ்பூன்

வெந்தயக்கீரை பருப்பு கூட்டு செய்முறை

ஒரு குக்கரில் கழுவிய பாசிப்பருப்பை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பூண்டு, 5 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து 2 விசில் விட்டு எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு சூடான கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் உளுந்து அரை ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு 2 வர மிளகாய் சேர்க்க வேண்டும். மேலும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். கால் ஸ்பூன் பெருங்காயம் மற்றும் 2 கொத்து கறிவேப்பிலையையும் சேர்க்க வேண்டும். வெங்காயம் சிவந்து வந்த பிறகு குக்கரில் வேக வைத்த பருப்பு கீரை அனைத்தையும் நன்றாக மசித்து சேர்க்க வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். கடைசியாக 2 ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கினால் கமகமக்கும் வெந்தயக்கீரை பருப்பு கூட்டு ரெடி.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் நல்லது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.