வெண்டைக்காய் காரக்குழம்பு : வெங்காய மசாலா சேர்த்த வித்யாசமான வெண்டைக்காய் காரக்குழம்பு; அசத்தும் ருசியில் செய்யலாம்?
வெண்டைக்காய் காரக்குழம்பு : ஆனால் சிலருக்கு வெல்லம் இனிப்புச் சுவையைத் தரும் என்ற எண்ணம் இருக்கும். எனவே கடைசியில் வெல்லம் சேர்ப்பது உங்கள் விருப்பம்தான். எனினும் இந்த வெங்காய மசாலா அரைத்து செய்யும் வெண்டைக்காய் காரக் குழம்பை செய்வது எப்படி என்று பாருங்கள்.

காரக்குழம்பு பிடிக்காதவர்கள் கூட இந்த வெண்டைக்காய் காரக்குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள். இது சூப்பர் சுவையானதாக இருக்கும். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி இதுபோன்ற குழம்பை செய்யவேண்டும் என்று நினைப்பார்கள். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைளுக்கும் இந்த வெண்டைக்காய் காரக் குழம்பு மிகவும் பிடிக்கும். இதில் கடைசியாக வெல்லம் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் சேர்க்காமலும் விடலாம். வெல்லம் சேர்க்கும்போது, அது புளிப்பு மற்றும் காரச்சுவை என இரண்டையும் பேலன்ஸ் செய்து ஒரு அருமையான சுவையான மாற்றிவிடும். ஆனால் சிலருக்கு வெல்லம் இனிப்புச் சுவையைத் தரும் என்ற எண்ணம் இருக்கும். எனவே கடைசியில் வெல்லம் சேர்ப்பது உங்கள் விருப்பம்தான். எனினும் இந்த வெங்காய மசாலா அரைத்து செய்யும் வெண்டைக்காய் காரக் குழம்பை செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
• கடுகு – கால் ஸ்பூன்
• சீரகம் – கால் ஸ்பூன்
• வெந்தயம் – கால் ஸ்பூன்
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• சின்ன வெங்காயம் – 10
• பூண்டு பல் – 15
• தக்காளி – 3 (பேஸ்டாக அரைத்துக்கொள்ளவேண்டும்)
• மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
• கல் உப்பு – தேவையான அளவு
• புளி – எலுமிச்சை அளவு
• வெண்டைக்காய் – கால் கிலோ (பொடியாக நறுக்கியது, வெண்டைக்காயை கழுவி சிறிது நேரம் உலர்த்திவிட்டுத்தான் நறுக்கவேண்டும். வெயிலில் உலர்த்தினால் நல்லது. அதில் உள்ள அந்த பிசுபிசுப்புத்தன்மை குறையும்)
செய்முறை
1. முதலில் புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். இதை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
2. ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் நறுக்கிய வெண்டைக்காய்களையும் சேர்த்து வதக்கி தனியாக வைத்துவிடவேண்டும்.
3. ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெயை சேர்த்து கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.
4. அடுத்து சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து பெரிய வெங்காயத்தை அரைத்து சேர்க்கவேண்டும். அனைத்தையும் நன்றாக வதக்கியவுடன், அதில் பேஸ்டாக அரைத்த தக்காளியைச் சேர்க்கவேண்டும். இவையனைத்தும் நன்றாக வதங்கவேண்டும்.
5. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.
6. அடுத்து புளிக்கரைசலை சேர்க்கவேண்டும். போதிய அளவு தண்ணீர் மற்றும் வக்கிய வெண்டைக்காய்களை சேர்த்து மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டால் சூப்பர் சுவையான வெண்டைக்காய் காரக் குழம்பு தயார்.
இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

டாபிக்ஸ்