காய்கறி கழனி மண்டி; என்ன பேரே வித்யாசமா இருக்கா? செஞ்சு பாருங்க டேஸ்ட் அசத்தும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  காய்கறி கழனி மண்டி; என்ன பேரே வித்யாசமா இருக்கா? செஞ்சு பாருங்க டேஸ்ட் அசத்தும்!

காய்கறி கழனி மண்டி; என்ன பேரே வித்யாசமா இருக்கா? செஞ்சு பாருங்க டேஸ்ட் அசத்தும்!

Priyadarshini R HT Tamil
Nov 26, 2024 12:18 PM IST

காய்கறி கழினி மண்டி என்ற வித்யாசமான ரெசிபி செய்வது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள்.

காய்கறி கழனி மண்டி; என்ன பேரே வித்யாசமா இருக்கா? செஞ்சு பாருங்க டேஸ்ட் அசத்தும்!
காய்கறி கழனி மண்டி; என்ன பேரே வித்யாசமா இருக்கா? செஞ்சு பாருங்க டேஸ்ட் அசத்தும்!

தேவையான பொருட்கள்

பல வகை காய்கறிகள் – கால் கிலோ

(வாழைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட், சௌசௌ, முள்ளங்கி, பச்சை பட்டாணி இன்னும் நீங்கள் விரும்பும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்)

அரிசி களைந்த கழனி – 2 கப்

தேங்காய்ப்பால் – அரை கப்

சின்ன வெங்காயம் – 10

பூண்டு பல் – 10

பச்சைமிளகாய் – 2

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

புளி – எலுமிச்சை அளவு

(சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

அரிசி களைந்த தண்ணீரை எடுத்துக்கொள்ளவேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை நறுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய்விட்டு, சூடானவுடன், கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து கறிவேப்பிலை போட்டு பொரிந்தவுடன், சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும். சின்ன வெங்காயத்தை நறுக்கக்கூடாது முழுதாக சேர்க்கவேண்டும்.

இவை நன்றாக வதங்கியவுடன், நறுக்கிய பலவகை காய்களை சேர்த்து நன்றாக கிளறவேண்டும். கலந்த பின்னர் அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி நன்றாக கிளறி விடவேண்டும்.

புளியைக் கரைத்து ஊற்றி கொதித்ததும், தேவையான உப்பு சேர்த்து மூடிபோட்டு 10 நிமிடம் வேக விடவேண்டும். வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிவிடவேண்டும். சூப்பர் சுவையான காய்கறி கழனி மண்டி தயார். இதில் பலவகை காய்கறிகளும் சேர்க்கப்படுவதால், இது மிகுந்த ஆரோக்கியமானது.

இதை சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம், இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதில் காரம் இருக்காது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்து பாருங்கள் கட்டாயம் ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள்.

நாம் அரிசியைக் கழுவும் தண்ணீரில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. அது உடலுக்கு தலை முதல் கால் வரை பல்வேறு நன்மைகளைத் தரும் என்பதால், அதை நாம் கீழே ஊற்றாமல் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். வழக்கமாக அரசியை முதல் முறை கழுவி அந்த தண்ணீரை கீழே ஊற்றிவிடவேண்டும்.

அடுத்த முறை கழுவும் தண்ணீரை பருப்பு வேகவைக்க அல்லது ரசத்துக்கு அல்லது காய்கறிகள் வேக வைக்க என பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத்தரும்.

நாம் அரிசியைக் கழுவி அந்த தண்ணீரை கீழே ஊற்றும்போது, அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் அனைத்தும் கீழே சென்றுவிடும். எனவே நீங்கள் கழனியை வேறு உபயோகத்துக்கு பயன்படுத்திக்கொள்வது நல்லது. அந்த நீரை நீங்கள் முகம் கழுவுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.