Vegan Ice cream: கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க சர்க்கரை இல்லாத இயற்கை சுவையுடன் வீகன் ஐஸ்க்ரீம் சுவைத்து மகிழுங்கள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vegan Ice Cream: கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க சர்க்கரை இல்லாத இயற்கை சுவையுடன் வீகன் ஐஸ்க்ரீம் சுவைத்து மகிழுங்கள்

Vegan Ice cream: கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க சர்க்கரை இல்லாத இயற்கை சுவையுடன் வீகன் ஐஸ்க்ரீம் சுவைத்து மகிழுங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 17, 2024 05:15 PM IST

கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாகவும், வீகன் பிரியர்கள் சாப்பிடும் விதமாகவும் இருந்து வரும் சில வீகன் ஐஸ்க்ரீம் வகைகளை பார்க்கலாம்.

சர்க்கரை இல்லாத இயற்கை சுவையுடன் வீகன் ஐஸ்க்ரீம்
சர்க்கரை இல்லாத இயற்கை சுவையுடன் வீகன் ஐஸ்க்ரீம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாக ஐஸ்க்ரீம் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக அதில் பால் சேர்க்கப்படுவதும், அதிக அளவில் சர்க்கரை இருப்பதாலும்தான். இவற்றுடன் அதன் குளிர்ச்சியான தன்மை சாப்பிட்டதுடன் உடலுக்கும், மனதுக்கு இதமான உணர்வை தருகிறது.

வீகன் ஐஸ்க்ரீம்

தாவரம் மற்றும் அதை சார்ந்த உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்கள் வீகன் என்று அழைக்கப்படுகிறார்கள். பால் சார்ந்த பொருள்களையும் வீகன் டயட்டை பின்பற்றுபவர்கள் சாப்பிடுவதில்லை. அந்த வகையில் வீகன் டயட்டை பின்பற்றுபவர்களும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்த தப்பிக்க பால் சேர்க்காமல் வெறும் காய்கறிகளை வைத்து ஐஸ்க்ரீம் தயார் செய்து சாப்பிடலாம்

அந்த வகையில் உடலுக்கும், மனதுக்கு குளிர்ச்சி தரும் வீகன் ஐஸ்க்ரீம் வகைகள் சிலவற்றை பார்க்கலாம்

வெண்ணிலா மற்றும் பாதாம் பால் ஐஸ்க்ரீம்

தேவையான பொருள்கள்

பாதாம் பால் - 2 கப்

வெல்லம் - கால் கப்

வெண்ணிலா - 1 டிஸ்பூன்

செய்முறை

சாஸ்பேன் எடுத்து அதில் பாதாம் பாலை மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும். இந்த பால் பொங்கவிட கூடாது. இதில் வெல்லத்தை பொடியாக்கி சேர்க்கவும். வெல்லம் பாலுடன் நன்கு கரைந்தவுடன் அதில் வெண்ணிலா சேர்க்க வேண்டும்.

பின்னர் இதை நன்கு குளிர்ச்சி அடைய செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து ஐஸ்க்ரீம் மேக்கருக்கு மாற்றி ப்ரிட்ஜில் ப்ரீஸ் செய்ய வேண்டும்.

அவ்வளவுதான் சுவை மிக்க வெண்ணிலா, பாதாம் பால் ஐஸ்க்ரீம் தயார்

சாக்லெட், வாழைப்பழம் மற்றும் தேங்காய் பால் ஐஸ்க்ரீம்

தேவையான பொருள்கள்

வாழைப்பழம் - நான்கு

கொக்கோ பவுடர் - கால் கப்

பீநட் பட்டர் (கடலை வெண்ணெய்) - 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் பால் - கால் கப்

செய்முறை

பீநட் பட்டர், கொக்கோ பவுடர் மற்றும் வாழைப்பழத்தை பிளெண்ட் செய்ய வேண்டும். இந்த கலவையைில் தேங்காய் பால் ஊற்றி கலந்த பின்னர், சுமார் 2 மணி நேரம் வரை ப்ரீஸ் செய்ய வேண்டும். நன்கு கடினமான பின் ஸ்கூப்பாக கோன்களில் வைத்து சாப்பிடலாம்

பேரிட்சை மற்றும் தேங்காய் பால் ஐஸ்க்ரீம்

தேவையான பொருள்கள்

முழு கொழுப்பு தேங்காய் பால் - 1 கேன்

பேரிட்சை - 6 முதல் 8 வரை

வெண்ணிலா - 1 டிஸ்பூன்

உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை

இந்த ஐஸ்க்ரீம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் தேங்காய் பாலை ப்ரிடீஜில் குளிர்ச்சியடைய செய்ய வேண்டும். பிளெண்டரில் வைத்து திடமான தேங்காய் பாலில் இருந்து க்ரீமை மட்டும் வெளியே எடுக்கவும்.

பேரிட்சை, வெண்ணிலா, உப்பு ஆகியவற்றையும் பிளெண்டரில் சேர்த்து க்ரீம் போன்று அரைக்கவும்.

பின்னர் இந்த கலவையை ஐஸ்க்ரீம் மேக்கருக்கு மாற்றி அதை ப்ரீசரில் சில மணி நேரங்கள் குளிர்ச்சி அடைய செய்ய வேண்டும். அவ்வளவுதான் பின்னர் எடுத்து பரிமாறலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.