வெஜ் குருமா : இடியாப்பத்துக்கு ஏற்ற வெஜ் குருமா; சூப்பர் சுவையானது; காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமானது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெஜ் குருமா : இடியாப்பத்துக்கு ஏற்ற வெஜ் குருமா; சூப்பர் சுவையானது; காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமானது!

வெஜ் குருமா : இடியாப்பத்துக்கு ஏற்ற வெஜ் குருமா; சூப்பர் சுவையானது; காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமானது!

Priyadarshini R HT Tamil
Updated Jun 04, 2025 10:25 AM IST

இந்த குருமா இடியாப்பத்துக்கு ஏற்றது. இதை நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்து டிஃபன் வகைகளுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள்.

வெஜ் குருமா : இடியாப்பத்துக்கு ஏற்ற வெஜ் குருமா; சூப்பர் சுவையானது; காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமானது!
வெஜ் குருமா : இடியாப்பத்துக்கு ஏற்ற வெஜ் குருமா; சூப்பர் சுவையானது; காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமானது!

தேவையான பொருட்கள்

• உருளைக்கிழங்கு – 1

• கேரட் – 1

• பீன்ஸ் – 5

• பச்சை பட்டாணி – 10

• பெரிய வெங்காயம் – 3

• பச்சை மிளகாய் – 2

• தக்காளி – 4

• மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்

• மல்லித் தூள் – 2 ஸ்பூன்

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

• முந்திரி – 10

• கசகசா – 2 ஸ்பூன்

• தயிர் – ஒரு டம்ளர்

• ஏலக்காய் – 1

• கரம் மசாலா – அரை ஸ்பூன்

• பட்டை – ஒரு நீளத் துண்டு

• கிராம்பு – 2

• எண்ணெய் – 4 ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு என அனைத்தையும் மிகச் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். அதை பட்டாணியுடன் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவேண்டும். குக்கர் அல்லது இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் வைத்து வேகவைத்துக்கொள்ளலாம்.

2. பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளி என அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.

3. தேங்காய் துருவல், முந்திரி, கசகசா மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். இதுதான் அதற்காக மசாலா.

4. கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அடுத்து நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

5. அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவேண்டும். தக்காளி குழைவாக வெந்து வரவேண்டும். பின்னர் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவேண்டும்.

6. அரைத்த மசாலா விழுது மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவேண்டும். குருமா நல்ல திக்காக வெந்து வரவேண்டும்.

7. கடைசியாக தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு இறக்கவேண்டும்.

இந்த குருமா இடியாப்பத்துக்கு ஏற்றது. இதை நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்து டிஃபன் வகைகளுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே இந்த குருமாவை ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.