இந்திய முனிவர்களிடம் இருந்து பெறப்பட்ட வேத கால பெயர்கள்; எக்காலத்துக்கு ஏற்றது! ஆண் குழந்தைகளுக்கு அழகிய பெயர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இந்திய முனிவர்களிடம் இருந்து பெறப்பட்ட வேத கால பெயர்கள்; எக்காலத்துக்கு ஏற்றது! ஆண் குழந்தைகளுக்கு அழகிய பெயர்கள்!

இந்திய முனிவர்களிடம் இருந்து பெறப்பட்ட வேத கால பெயர்கள்; எக்காலத்துக்கு ஏற்றது! ஆண் குழந்தைகளுக்கு அழகிய பெயர்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Dec 29, 2024 10:55 AM IST

உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற இந்திய முனிவர்களின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய முனிவர்களிடம் இருந்து பெறப்பட்ட வேத கால பெயர்கள்; எக்காலத்துக்கு ஏற்றது! ஆண் குழந்தைகளுக்கு அழகிய பெயர்கள்!
இந்திய முனிவர்களிடம் இருந்து பெறப்பட்ட வேத கால பெயர்கள்; எக்காலத்துக்கு ஏற்றது! ஆண் குழந்தைகளுக்கு அழகிய பெயர்கள்!

அகத்தியா

இந்து இதிகாசத்தில் முக்கியமான முனிவரின் பெயர் அகத்தியா என்பதாகும். அவர்கள் அதிக ஞானமுள்ள மற்றும் சக்திவாய்ந்த நபர் ஆவார். அகத்தியா என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானது. அதற்கு, மலையளவு அடக்கமானவர் என்று பொருள். இதற்கு அறிவு, பலம் மற்றும் தடைகளை கடந்து வருபவர் ஆகிய அர்த்தங்கள் உள்ளது.

அதர்வன்

வேத மரபுகளில் திறமையான முனிவர் அல்லது மதகுரு என்பதை அதர்வன் என்ற பெயர் குறிக்கிறது. இந்த பெயருக்க அறிவு, ஆன்மீகம் மற்றும் புனித வாசகங்களுடன் தொடர்புகொண்ட நபர் என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன. அதர்வன் என்பது அதர்வன வேதத்துடன் தொடர்புகொண்டது. நான்கு வேத பாடங்களுள் ஒன்றுதான் இந்த அதர்வன வேதம்.

ஆர்வா

ஆர்வா என்றால் தொடையில் இருந்து பிறந்தவர் என்று பொருள். இது ஒரு ஆன்மீக சக்திவாய்ந்த முனிவரின் பெயராகும். இந்தப்பெயருக்கு மீண்டு எழும் திறன், பவம் மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறன் ஆகிய அர்த்தங்கள் உள்ளது. ஆர்வா என்றால், எவ்வித இடர்வரினும் அதில் தாக்குபிடிக்கக் கூடிய நபர் என்ற பொருளைத் தரும்.

பார்கவா

பார்கவா என்றால், பிர்கு வம்சத்தை சேர்ந்த்வர், இது பிர்கு என்ற ஞானியின் மரபில் தோன்றிய நபர் என்பதைக் குறிக்கிறது. இந்தப்பெயருக்கு ஞானம், அறிவு, ஒளி, ஆன்மீகம் ஆகிய அர்த்தங்கள் உள்ளது. பார்க்கவா என்பது பரசுராமா என்பதுடன் தொடர்புடைய பெயராகும். இது விஷ்ணுவின் அவதாரம்.

தேவாபி

தேவாபி என்றால், கடவுளின் நண்பர்கள் என்று பொருள். இது தெய்வீக அம்சம் கொண்டவர் என்பதைக் குறிக்கிறது. ஆன்மீகம், மதகுரு ஆகியவற்றுடன் தொடர்புடைய பெயராகும். தேவாபி என்பவர் நற்குணங்களைக் கொண்ட ஒரு புனிதர். அவரின் சேதத்தையே அமைதிக்காக துறந்தார்.

நச்சிகேடா

நச்சிகேடா என்றால், ஒருவர் எதையும் செல்ல அனுமதிக்காத நபர் என்ற அர்த்தத்தை தரும் பெயராகும். இது அர்பணிப்பு, ஆர்வம் மற்றும் உண்மை என்பதைக் குறிக்கும் பெயராகும். உபநிஷத்தில், நச்சிகேடா என்றால், வாழ்வு மற்றும் மரணம் என்பதன் ரகசியங்களை படித்து ஞானம் பெறுபவர் என்று பொருள். எமனிடம் கல்வி கற்பவர் என்பதைத் குறிக்கிறது.

யஸ்நவல்க்யா

யஜ்நவல்கியா என்றால், புனித காரியங்களை முன்னெடுத்து நடத்தும் நபர் என்று பொருள். இதற்கு ஆன்மீக அறிவு மற்றும் ஒழுக்கம் என்று பொருள். இவர் இந்திய இதிகாசத்தில் உள்ள முக்கியமான முனிவர் ஆவார். சுயம் குறித்த இவரது பாடங்கள் இந்திய இதிகாசத்தில் சிப்பான இடம் பெற்றவையாகும். உபநிஷத்தில் இவர் உண்மை குறித்து விளக்கியிருப்பார்.

விஷ்ரவா

விஷ்ரவா என்றால் புகழ்பெற்ற அல்லது பிரபலமான என்று பொருள். இந்த பெயருக்க அறிவு, ஆன்மீக ஆழம் மற்றும் கவுரவம் ஆகிய அர்த்தங்களைக் கொடுக்கிறது. விஷ்ரவா என்றால், ஞானி என்று பொருள். குபேரனின் தந்தை. குபேரன், செல்வத்தின் கடவுள். ராமாயணத்தில் இடம்பெறும் ராமனின் எதிரியான ராவணன் என்பதையும் குறிக்கிறது.

உபமன்யூ

உபமன்யூ என்றால் மனுவுக்கு நிகரான என்று பொருள். இந்து கலாச்சாரத்தில் மனிதத்தன்மையுடன் நடப்பவர் என்று பொருள். இந்தப்பெயர் கிரியேட்டிவிட்டி, விடாமுயற்நி மற்றும் மீண்டெழும் திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது. உபமன்யூ என்றால், சிவனின், தீவிர பக்தர், சீடர் என்று பொருள். அர்ப்பணிப்பின் அடையாளம் என்று பொருள்.

ரிஷபா

ரிஷபா என்றால் காளை அல்லது சிறப்பான என்று பொருள். இது பலம், தலைமைப்பண்பு மற்றும் ஆன்மீக அறிவு கொண்ட நபர் என்பதைக் குறிக்கிறது. ஜெயின்களுன் ரிஷபா என்பவர்தான் முதல் தீர்த்தங்கரர். இது சுயகட்டுப்பாடு, நல் வழியில் நடப்பவர், ஒளிமயமானவர் என்ற பொருளைக் குறிக்கிறது.