தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Vazhaikai Podimas Banana Podimas A Recipe That Even Those Who Dont Like It Will Love It

Vazhaikai Podimas : வாழைக்காய் பொடிமாஸ்! பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Jan 06, 2024 05:00 PM IST

Vazhaikai Podimas : வாழைக்காய் பொடிமாஸ்! பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் ரெசிபி!

Vazhaikai Podimas : வாழைக்காய் பொடிமாஸ்! பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் ரெசிபி!
Vazhaikai Podimas : வாழைக்காய் பொடிமாஸ்! பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் ரெசிபி!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 2

தேங்காய் – ஒரு ஸ்பூன் (துருவியது)

உப்பு -தேவையான அளவு

செய்முறை

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு கடாயில் தண்ணீர் வைத்து சூடாக்கி, அதில் வாழைக்காயை இரண்டு துண்டுகளாக நறுக்கி போடவேண்டும்.

சிறிது நேரத்தில் வாழைக்காய் வெந்தவுடன் அதன் தோல் கருப்பாகும். அதை திருப்பி ஒரு நிமிடம் வேகவிடவேண்டும்.

அடுப்பை அணைத்துவிட்டு, ஆறியவுடன், வாழைக்காயை எடுத்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும்.

பின்னர் அதன் சருமத்தை நீக்கிவிட்டு, அது கைகளில் எளிதாக எடுபடும் வகையில் இருக்கும்.

கேரட் துருவும் துருவியில் வாழைக்காயை துருவிக்கொள்ள வேண்டும்.

கடாயில் தாளிக்கக்கொடுத்துள்ள கடுகு, உளுநது, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பொரியவிடவேண்டும்.

உளுந்து சிவந்தவுடன், துருவிய வாழைக்காயை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். அதில் உப்பு சேர்க்க வேண்டும்.

கடாயில் சேர்த்துள்ள வாழைக்காயை நன்றாக கிளறிவிடவேண்டும்.

இப்போது துருவிய தேங்காய் சேர்த்து மேலும் நன்றாக கிளறி சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். சுவையான வாழைக்காய் பொடிமாஸ் சாப்பிட தயாராகிவிட்டது.

இதை சாம்பார், ரசம், தயிர் சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம்.

இதை சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம் அல்லது அப்படியே கூட சாப்பிடலாம்.

குறிப்பு –

வாழைக்காயை சரியான பதத்தில் வேகவைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது உதிரியாக வராது.

இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்தால் கூடுதல் சுவை கிட்டும்.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்