Vatha Kulambu : 10 நாள் ஆனாலும் கெடாத மடப்பள்ளி தேன் வத்தக் குழம்பு; செஞ்சு வச்சுட்டு ரெஸ்ட் எடுங்க!-vatha kulambu madapalli honey vatha broth which does not spoil even after 10 days stop and take a rest - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vatha Kulambu : 10 நாள் ஆனாலும் கெடாத மடப்பள்ளி தேன் வத்தக் குழம்பு; செஞ்சு வச்சுட்டு ரெஸ்ட் எடுங்க!

Vatha Kulambu : 10 நாள் ஆனாலும் கெடாத மடப்பள்ளி தேன் வத்தக் குழம்பு; செஞ்சு வச்சுட்டு ரெஸ்ட் எடுங்க!

Priyadarshini R HT Tamil
Jan 24, 2024 11:35 AM IST

Vatha Kulambu : 10 நாள் ஆனாலும் கெடாத மடப்பள்ளி தேன் வத்தக் குழம்பு; செஞ்சு வச்சுட்டு ரெஸ்ட் எடுங்க!

Vatha Kulambu : 10 நாள் ஆனாலும் கெடாத மடப்பள்ளி தேன் வத்தக் குழம்பு; செஞ்சு வச்சுட்டு ரெஸ்ட் எடுங்க!
Vatha Kulambu : 10 நாள் ஆனாலும் கெடாத மடப்பள்ளி தேன் வத்தக் குழம்பு; செஞ்சு வச்சுட்டு ரெஸ்ட் எடுங்க!

செய்து வைத்து பாருங்கள் 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். நீங்கள் வெளியூர் செல்லும்போது இதுபோன்ற வத்தக்குழம்பை செய்து கையில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். வீட்டிலும் செய்து வைத்துவிட்டு செல்லலாம்.

மற்ற வத்தல் குழம்புகளுக்கும், இந்த மடப்பள்ளி வத்தல் குழம்புக்கும் உள்ள வித்யாசம் என்னவெனில், இதை இறக்கும்போது நல்லெண்ணெய், மிளகுத்தூள், கருப்பட்டி சேர்த்து இறக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்

பொடி செய்ய -

வெந்தயம் – கால் ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

வரமல்லி விதை – 2 ஸ்பூன்

கட்டி பெருங்காயம் – ஒரு சிறிய கட்டி

கறிவேப்பிலை – 2 கொத்து

துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்

பச்சரிசி – அரை ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

(எந்த வகை வத்தல் குழம்பு அல்லது புளிக்குழம்பு செய்தாலும் அதற்கு நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்துவது நல்லது)

கடுகு – கால் ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

காய்ந்த மிளகாய் – 1

கறிவேப்பிலை – 2 கொத்து

பச்சை சுண்டைக்காய் – ஒரு கைப்பிடி

(இதற்கு பதில் சுண்டைக்காய் வத்தலும் சேர்க்கலாம்)

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மல்லித்தூள் – அரை ஸ்பூன்

தக்காளி – 2 (அரைத்து விழுதாக சேர்க்க வேண்டும்)

புளிக்கரைசல் – ஒரு கப் (கெட்டியாக கரைத்தது)

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – கால் ஸ்பூன்

தேங்காய் துருவல் – அரை ஸ்பூன்

கருப்பட்டி பொடி – அரை ஸ்பூன்

செய்முறை

முதலில் வெந்தயம், சீரகம், மிளகு, பருப்பு, பச்சரிசி, வர மிளகாய், வர மல்லி விதை, பெருங்காயம், கறிவேப்பிலை அனைத்தையும் ஒரு கடாயில் ட்ரையாக வறுத்து, நன்றாக ஆறவைத்து, காய்ந்த மிக்ஸியில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வர மிளகாய் இவற்றை முழுதாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். இதில் பச்சை சுண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து தக்காளியை மிக்ஸியில் அடித்து சேர்க்க வேண்டும். அது நன்றாக கொதித்தவுடன், தனியாக அரைத்து வைத்துள்ள ஸ்பெஷல் வத்தல் குழம்புப்பொடியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கெட்டடியான புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும். பின்னர் தேங்காய் துருவல் தூவி எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

பின்னர், நல்லெண்ணெய், மிளகுத்தூள், கருப்பட்டி சேர்த்து அடுப்பை அணைத்துவிடலாம்.

இந்த வத்தல் குழம்பை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், வத்தல் போதும் அல்லது பருப்பு துவையல் கூட போதுமானது.

உங்கள் வழக்கமான அளவைவிட அதிகம் சாப்பிடலாம். மேலும் இதை 10 நாட்கள் வரை தினமும் சுடவைத்து பயன்படுத்தலாம். வீணாகாது. இது வெளியூர் செல்லும்போது எடுத்துச்செல்வதற்கும், வீட்டில் இருப்பவர்கள் செய்து வைத்துவிட்டு செல்வதற்கும் ஏற்றது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.