வீட்டு அலங்கார குறிப்புகள் : உங்கள் வீட்டில் கிரிஸ்டல் ஆமைகளை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
வீட்டு அலங்கார குறிப்புகள் : உங்கள் வீட்டில் நீங்கள் அழகுக்காக கிரிஸ்டல் ஆமை பொம்மையை வைக்கும்போது, அது உங்கள் வீட்டுக்கு வாஸ்துபடி அதிகமான வெற்றியைக் கொண்டு வருகிறது.

கிரிஸ்டல் ஆடைகள் என்பது என்ன?
முதலில் கிரிஸ்டல் ஆமைகள் வீடுகளில் அலங்காரப் பொருளாகத்தான் இருந்தது. இதை இயற்கை கற்களில் செய்தார்கள். ஜேட், ரோஸ் குவார்ட்ஸ், அமெதிஸ்ட் அல்லது கிளியர் குவார்ட்ஸ் போன்ற இயற்கை கிறிஸ்டல்களால் உருவாக்கப்படும். அதன் பெயருக்கு ஏற்றவாறு ஆமை வடிவில் இருக்கும். இதை நீங்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தியானம் செய்யும் அறைகளில் வைக்கும்போது அது உங்களுக்கு வெற்றியைக் கொண்டு வருகிறது.
ஏன் ஆமை வடிவம்
கிறிஸ்டல் ஆமை, பாதுகாப்பின் அம்சமாகக் கருதப்படுகிறது. இது உங்கள் இல்லத்துக்கு அளவற்ற அதிகப்படியான செல்வத்தைக் கொண்டுவருகிறது. நிலையான மற்றும் பலம் வாய்ந்த என்பதன் அடையாளமாக இந்த ஆமை பொம்மைகள் சில கலாச்சாரங்களில் உள்ளது. பெங்ஃசூயில் நீண்ட வாழ்வு மற்றும் நிலைத்தன்மைக்கு அடையாளமாக விளங்குகிறது. இது உள்புற காயங்களை ஆற்றவும், உங்கள் வீட்டின் செல்வத் தடையை நீக்கவும் உதவுகிறது.
அது எப்படி உதவும்?
கிரிஸ்டல் ஆமைகள், உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும். அமைதியைக் கொண்டுவரும். உங்கள் வீட்டிற்கு நேர்மறையான எண்ணங்களைக் கொண்டுவரும். அதை நீங்கள் வைக்கும் இடங்களில் மங்களம் நிறையும். ஒரு இடத்தின் ஆற்றலை சமப்படுத்தும். மக்களிடம் கவனத்தை அதிகரிக்கும். உங்கள் வீட்டில் பணத்தடை இருந்தால் அதை சரிசெய்யும்.
