Variety Rice Powder : இந்த ஒரு பொடி போதும்! வெரைட்டி ரைஸாக செய்து அசத்தலாம்! அதில் கத்தரிக்காய் சாதம்! 2 ரெசிபி!
Variety Rice Powder : இந்த ஒரு பொடி போதும்! வெரைட்டி ரைஸாக செய்து அசத்தலாம்! அதில் கத்தரிக்காய் சாதம்! 2 ரெசிபி!
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – ஒரு கப்
தண்ணீர் – இரண்டரை கப்
கத்தரிக்காய் – 6
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
கடுகு-உளுந்து – ஒரு ஸ்பூன்
முந்திரி பருப்பு – 8
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எலுமிச்சை – 1 பழம்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கத்தரிக்காய் சாதம் பொடி செய்ய
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 6
பட்டை – சிறிய துண்டு
தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
அரிசியை மூன்று முறை கழுவி 20 நிமிடங்கள் 1 கப் தண்ணீரில் ஊறவைத்து, பின் எஞ்சிய ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, உளுத்தம்பருப்பு, வெந்தயம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும்.
பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் வற்றும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்து மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவேண்டும்.
கத்தரிக்காயை கழுவி காம்புகளை நீக்கி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவேண்டும். வேகவைத்த சாதத்தை ஒரு தட்டில் மாற்றி மேலே சில துளிகள் எண்ணெய் விட்டு ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.
கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவேண்டும். இடையில் திருப்பிவிடவேண்டும். கத்தரிக்காய் பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் சுருள வதங்கியதும் ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவேண்டும்.
கடாயில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் உடைத்த முந்திரி பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேகவைத்த சாதத்தை சேர்த்து மெதுவாக கிளறவேண்டும்.
அதோடு தேவையான அளவு உப்பு, வதக்கிய கத்தரிக்காய், மஞ்சள்தூள் மற்றும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து மெதுவாக கிளறவேண்டும். சாதம் பொடியுடன் நன்றாக கலந்ததும், எலுமிச்சை சாறை பிழிந்து மெதுவாக கிளறி அடுப்பை அணைக்கவேண்டும். 10 நிமிடங்கள் மூடி வைத்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும்.
கத்தரிக்காயின் நன்மைகள்
கத்தரிக்காய் சாம்பாருக்கு நல்ல சுவையை அளிக்கக்கூடிய காய்களுள் ஒன்று. கத்தரிக்காய், முருங்ககைக்காய், மாங்காய் இந்த மூன்று காய்களையும் சேர்த்து வைக்கக்கூடிய சாம்பார் மிகவும் சுவையானதாக இருக்கும்.
அதனுடன் பலாக்கொட்டையும் சேர்த்துக்கொள்ள எந்தவிட மசாலாக்களும் சேர்க்காமலே சாம்பார் சுவை அள்ளும்.
இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கும்.
ஆந்தோசியனின் என்பது கத்தரிக்காயில் அதிகம் உள்ளது. இதில் உள்ள இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் கத்தரிக்காய் இந்த நிறத்தை கொடுக்கின்றன. இது பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
இதய நோய்கள் வராமல் காக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எடை குறைப்பில் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது.
இதை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை வறுத்து சாப்பிடலாம். சாம்பார் வைத்து சாப்பிடலாம். சாம்பாரில் சேர்ததால் கூடுதல் சுவையை கொடுக்கிறது.
கத்தரிக்காய் சிலருக்கு சரும அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே சரும பிரச்னைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்க்கக்கூடாது.
கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளவர்களும் கத்தரிக்காயை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றபடி அனைவரும் வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்தான் கத்தரிக்காய்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்