தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Varicose Vein Varicose Vein Can Be Cured In 15 Days Without Surgery Here It Is

Varicose vein : அறுவைசிகிச்சையின்றி வெரிக்கோஸ் வெயினை 15 நாளில் குணப்படுத்தலாம்! இதோ இப்படி!

Priyadarshini R HT Tamil
Feb 23, 2024 02:44 PM IST

Varicose vein : அறுவைசிகிச்சையின்றி வெரிக்கோஸ் வெயினை 15 நாளில் குணப்படுத்தலாம்! இதோ இப்படி!

Varicose vein : அறுவைசிகிச்சையின்றி வெரிக்கோஸ் வெயினை 15 நாளில் குணப்படுத்தலாம்! இதோ இப்படி!
Varicose vein : அறுவைசிகிச்சையின்றி வெரிக்கோஸ் வெயினை 15 நாளில் குணப்படுத்தலாம்! இதோ இப்படி!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

கருப்பு திராட்சை – 20

அலசி, தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

காலையில் பல் துலக்கியபின், வெறும் தண்ணீரைப்பருகிவிட்டு, பின்னர் அந்த திராட்சை தண்ணீரை பருக வேண்டும். ஊறிய திராட்சைகளை அப்படியே மென்று சாப்பிடவேண்டும்.

விதையை மென்று சாப்பிடவேண்டும். இதை சாப்பிட முடியவில்லையென்றால், அதை மிக்ஸியில் அரைத்து அப்படியே பருகவேண்டும். வடிகட்டக்கூடாது.

அதன் விதைகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. இதை 15 நாள் தொடர்ந்து சாப்பிட பலன் தரும்.

உலர்ந்த கருப்பு திராட்சையின் நன்மைகள்

ரத்தத்தை சுத்திகரிக்கிறது

முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவது மற்றும் வறண்ட சருமம் ஆகிய இரண்டுக்கும் காரணம் ரத்தத்தில் உள்ள அழுக்குகள்தான். எனவே தினமும் இந்த கருப்பு திராட்சைகளை உட்கொள்ளும்போது, உங்களுக்கு இளமை தோற்றத்தையும், ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடியை கொடுக்கிறது.

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நார்ச்சத்துக்கள் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இது வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரம் கொடுக்கிறது. இதன் ஊட்டச்சத்து அளவுகளை கடந்து, கருப்பு திராட்சைகள், பல்வேறு மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக சிறந்தது.

இந்த கருப்பு திராட்சைகளை தினமும் எடுத்துக்கொள்ளும்போது அது உடலில் உள்ள நச்சுக்கள், கழிகள் மற்றும் மற்றும் மாசு ஏற்படுத்தும் பொருட்களை ரத்தத்தில் இருந்து வெளியேற்றுகிறது. கூடுதலாக, அது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் இரண்டும் நன்றாக செயல்பட உதவுகிறது. இதில் இயற்கை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. கருப்பு திராட்சைகள் உடலை சுத்தம் செய்து நச்சுக்களை வெளியேற்றுகின்றன.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

பொட்டாசியச்சத்து அதிகம் உள்ள கருப்பு திராட்சை, உடலில் சோடியத்தின் அளவை குறைத்து, ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. இது அதிக கொழுப்பு, அதிக ட்ரைகிளிசரைட்ஸ் அல்லது இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. 

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அது திடீரென அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளவர்கள், இதை ஊறவைத்து எடுத்துக்கொண்டு ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

மலச்சிக்கலை போக்குகிறது

கருப்பு திராட்சைகளில் உள்ள உயர் நார்ச்சத்துக்கள், மலமிலக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கலை போக்குகிறது. வழக்கமாக குடல் இயங்குவதை மேம்படுத்துகிறது. 

மலச்சிக்கல் மற்றும் நீர்ச்சத்து குறைவதற்கு காரணம் போதிய நார்ச்சத்துக்கள் எடுத்துக்கொள்ளாதது, சரியாக சாப்பிடாதது, அதிகப்படியான சர்க்கரை சாப்பிடுவது மற்றும் குடல் நுண்ணுயிர்கள் சமமின்மை ஆகியவை ஆகும். இதில் உள்ள ஆரோக்கியமான நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்கள் ஒருங்கிணைந்து செயல்பட உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கருப்பு உலர் திராட்சைகளில் வைட்டமின் சி மற்றும் பி உள்ளது. இவையிரண்டும் உடலுக்கு நோய் எதிர்ப்புத்திறனை வழங்குபவை. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. தொற்றுக்களை தடுக்க உதவுகிறது.

இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்து போராடுகிறது

கருப்பு திராட்சையில் உள்ள இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவை, இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்து போராடும் ஒரு உணவு முறையாகும். 

அதனால் அனீமியாவை தடுக்கிறது. இதில் உள்ள காப்பர், ரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கு உதவுகிறது. ஊறவைத்த கருப்பு திராட்சையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது அனீமியாவைத்த தடுக்கிறது.

உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது

கருப்பு உலர் திராட்சைகள், உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது. இதில் மெலோட்டனின் உள்ளது. அது உறக்கத்தை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தை குறைக்கிறது. உறக்கப் பிரச்னைகளுடன் தொடர்புடைய அழற்சி பிரச்னைகளை போக்குகிறது.

மாதவிடாய் கால வலிகளை போக்குகிறது. கெட்ட கொழுப்பை குறைக்கிறது. பற்களில் ஆரோக்கியத்தை பரிமாறுகிறது. இது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலுக்கு மருந்தாகிறது.

வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது

கருப்பு திராட்சைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் முக்கிய ஃபைட்டோகெமிக்கல்கள், உங்கள் சரும செல்கள் சேதமடைவதில் இருந்து பாதுகாக்கும். அதிக நேரம் வெளியிலில் திரிந்தாலோ அல்லது அதிக மாசுகள் உள்ளிட்டவை சருமத்தில் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

உங்கள் சரும செல்களில் டியோக்ஸிரிபோநியூகிளைக் அமிலம் அழிவதை, தடுத்து, ஃபீரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. மேலும் அது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புத்திறனைக் கொடுக்கிறது. நமது தசை நார்களில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கிறது.

கெட்ட கொழுப்புக்களின் அளவை குறைக்கிறது

கருப்பு திராட்சையில் கொழுப்பு இல்லை. மாறாக, இது லோ டென்சிட்டி லிப்போ புரோட்டீன்கள் கொடுக்கும் நச்சு விளைவுகளை தணிக்க உதவுகிறது. இது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு என்று கூறப்படுகிறது. 

இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது கொழுப்பு அளவை குறைக்கிறது. இது கெட்ட கொழுப்பை குறைத்து கல்லீரலுக்கு செல்லாமல் தடுக்கிறது. கொழுப்பு அளவை குறைப்பதில், கருப்பு திராட்சைகளில் உள்ள பாலிஃபினால்கள், இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இது உடலில் பல என்சைம்கள் கொழுப்பை உறிஞ்ச உதவுகிறது.

அனீமியாவை எதிர்த்து போராடுகிறது

கடுமையான அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள், கருப்பு திராட்சைகளை உட்கொள்வதன் மூலம் பலன் பெற முடியும். இதில் உள்ள உயர் இரும்புச்சத்துக்கள், பல பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ளதை விட சிறந்தது.

இரும்புச்சத்து, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு நல்லது. கருப்பு திராட்சைகளை அடிக்கடி உட்கொள்வதன் மூலம், நமது உடலுக்கு அன்றாடம் தேவையான இரும்புச்சத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதனால் அனீமியா ஏற்படாமல் தடுக்க முடியும். கருப்பு திராட்சைகள் அனீமியாவின் மற்ற அறிகுறிகளான, சோர்வு, உடல் நிறம் மாறுவது, மூச்சுத்திணறல், உள்ளிட்டவைகளையும் தடுக்கிறது.

நினைவாற்றலை அதிகரிக்கிறது

இதில் உள்ள ஆந்தோசியானின், ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள், லிபிட் பெரோக்ஸிடேசன் அவை கற்றல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஃப்ளேவனாய்ட்கள், நரம்பியல் அழற்சியை குறைக்கிறது. அது நினைவாற்றல், அதிகரிக்க உதவுகிறது.

பற்களுக்கு நல்லது

ஊறவைத்த கருப்பு திராட்சைகளை சாப்பிடுவதால் பற்களுக்கு அது நல்ல பலன்களைக் கொடுக்கிறது. இது வாய் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. பற்களில் உருவாகும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. 

கிருமிகளை போக்குகிறது, பற்களில் படிந்துள்ள பல்வேறு கிருமிகளையும் அகற்றுகிறது. இதனால், உங்கள் ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது. இதில் உள்ள போரான் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

தலைமுடி மற்றும் சருமத்துக்கு நன்மை அளிக்கிறது

இது தலைமுடி உதிர்வு மற்றும் நரையை போக்குகிறது. இதை நீங்கள் உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளும்போது உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது.

இதில் இரும்பு மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உடல் இரும்புச்சத்து உறிஞ்சுவதை உறுதிசெய்து, தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. கருப்பு திராட்சைகளை ஆரோக்கியமான கருங்கூந்தலுக்கு உதவுகிறது. இதை அடிக்கடி எடுத்துக்கொள்வது, பளபளப்பான சருமத்துக்கு உதவுகிறது. மேலும் வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது.

கருப்பு திராட்சைகளில் அதிகளவில் உடலுக்கு தேவையான நன்மைகள் உள்ளன. இதில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆற்றல் உள்ளது. இது அனைவருக்கும் நல்லது. இதில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளது. இதை ஓரிரவு ஊறவைத்து பயன்டுத்த வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்