Vangi Bath Podi : வாங்க செய்யலாம் வாங்கி பாத்! கத்தரிக்காய் சாதம் செய்ய பொடி மற்றும் சாதம்! 2 ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vangi Bath Podi : வாங்க செய்யலாம் வாங்கி பாத்! கத்தரிக்காய் சாதம் செய்ய பொடி மற்றும் சாதம்! 2 ரெசிபி!

Vangi Bath Podi : வாங்க செய்யலாம் வாங்கி பாத்! கத்தரிக்காய் சாதம் செய்ய பொடி மற்றும் சாதம்! 2 ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated Jul 25, 2024 11:54 AM IST

Vangi Bath Podi : வாங்க செய்யலாம் வாங்கி பாத்! கத்தரிக்காய் சாதம் செய்ய பொடி மற்றும் சாதம் இரண்டும் செய்ய இங்கு ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

Vangi Bath Podi : வாங்க செய்யலாம் வாங்கி பாத்! கத்தரிக்காய் சாதம் செய்ய பொடி மற்றும் சாதம்! 2 ரெசிபி!
Vangi Bath Podi : வாங்க செய்யலாம் வாங்கி பாத்! கத்தரிக்காய் சாதம் செய்ய பொடி மற்றும் சாதம்! 2 ரெசிபி!

மற்ற அனைவரும் சாப்பிடலாம் என்றாலும், சிலருக்கு கத்தரிக்காய் பிடிக்காது. கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கும் இதுபோல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வாங்கி பாத் பொடி செய்ய தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

வரமல்லி – ஒரு ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

பட்டை – 2

ஏலக்காய் – 1

வெந்தயம் – கால் ஸ்பூன்

கசகசா – அரை ஸ்பூன்

வர மிளகாய் – 6

கறிவேப்பிலை – 2 கொத்து

தேங்காய் துருவல் – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் கடலை பருப்பு, உளுந்து, சீரகம், வரமல்லி, மிளகு, பட்டை, ஏலக்காய், வெந்தயம், கசகசா, வர மிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்து ட்ரையாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

வறுக்கும்போது அடுப்பை சிம்மில் வைத்துவிடவேண்டும். கருகிவிடாமல் சிவக்கும் வரை வறுக்கவேண்டும். பின்னர் கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நல்ல ட்ரையாக வறுத்து எடுக்கவேண்டும்.

அனைத்து பொருட்களும் நல்ல மணம் வரும் வரை வறுத்து எடுத்து, ஆறவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துககொள்ளவேண்டும். 

நல்ல பொடியானவுடன், அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்.

இந்தப்பொடியை அனைத்து வெரைட்டி சாதங்கள் செய்யவும், காய்கள் வறுக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தப் பொடியை பயன்படுத்தி கத்தரிக்காய் சாதம் எனும் வாங்கி பாத் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

கடலை பருப்பு – அரை ஸ்பூன்

கடலை – ஒரு கப்

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

வர மிளகாய் – 5

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கத்தரிக்காய் – 3 (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

புளித்தண்ணீர் – அரை கப்

வேக வைத்த சாதம் – ஒரு கப்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் அதில் கடலை, பெருங்காயத்தூளை தூவவேண்டும். கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை முழுதாக சேர்த்து அனைத்தும் தாளித்து வரவேண்டும்.

பின்னல் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். கடைசியாக உப்பு மஞ்சள் தூள், கத்தரிக்காய், அரைத்த வாங்கி பாத் மசாலாப்பொடி சேர்த்து வதக்கி, புளித்தண்ணீர் சேர்த்து மூடிவைத்து தண்ணீர் வற்றும் வரை கொதிக்கவிடவேண்டும்.

தண்ணீர் வற்றியவுடன் நன்றாக கலந்து வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். நன்றாக அனைத்தையும் கலந்துவிட்டால் சூப்பர் சுவையில் வாங்கி பாத் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தா கூட போதுமானது.

தேவைப்பட்டால், உருளைக்கிழங்கு வறுவல் செய்துகொள்ளலாம். வேறு பொரியல், வறுவல்களும் பொருத்தமாக இருக்கம். இது நல்ல லன்ச் பாக்ஸ் ரெசிபியாகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.