GI tag for Red ant Chutney: ஒடிசா சிவப்பு எறும்பு சட்னிக்கு மதிப்புமிக்க GI tag.. ஆச்சர்யமூட்டும் விஷயம் இதோ!
எறும்புகளையும் அவற்றின் முட்டைகளையும் பலமுறை சேகரித்து சுத்தம் செய்து சட்னி தயாரிக்கிறார்கள். இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பு போன்றவற்றைச் சேர்த்து இந்த சட்னியை அரைக்கின்றனர்.

சிவப்பு எறும்பு சட்னி (ఎర్ర చీమల చట్నీ (youtube))
நம் நாட்டில் ஒடிசாவில் சிவப்பு எறும்பு சட்னி அதிகம் உண்ணப்படுகிறது. மேலும் பழங்குடியின மக்கள் இந்த சிவப்பு எறும்பு சட்னியை மிகவும் விரும்புகின்றனர். பழங்காலத்திலிருந்தே சிவப்பு எறும்புகளுடன் சட்னி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டம் இந்த அரிய உணவின் பிறப்பிடமாகக் கூறப்படுகிறது. இங்கே இந்த சிவப்பு எறும்பு சட்னி அவர்களின் உணவு வகைகளில் ஒரு முக்கிய பகுதியாகும். அதனால்தான் இப்பகுதிக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.
சிவப்பு எறும்புகள், சில மசாலா மற்றும் மூலிகைகள் இந்த சட்னியில் சேர்க்கப்பட்டுகின்றன. இதனால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என பழங்குடியினர் நம்புகின்றனர். அதனால் தான் ஒடிசாவுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டது.