Tamil News  /  Lifestyle  /  Valentine's Week Full List 2024: Rose Day To Kiss Day, All About 7 Days Of Love

Valentine's Week: ’காதலிப்பது எப்படி?’ ரோஜா தினம் முதல் முத்த தினம் வரை! முழு விவரம் இதோ!

Kathiravan V HT Tamil
Feb 06, 2024 12:49 PM IST

‘காதலர் தினம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று வரும் அதே வேளையில், பிப்ரவரி 7ஆம் தேதி முதல் காதலர் தின வாரம் கொண்டாடப்படுகிறது’

காதலர் தினம்
காதலர் தினம்

ட்ரெண்டிங் செய்திகள்

காதலர் தினம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று வரும் அதே வேளையில், பிப்ரவரி 7ஆம் தேதி முதல் காதலர் தின வாரம் கொண்டாடப்படுகிறது. 

பிப்ரவரி 7ஆம் தேதி ரோஸ் தினமாகவும் ஆகவும், பிப்ரவரி 8ஆம் தேதி ப்ரொப்போஸ் தினமாகவும், பிப்ரவரி 9ஆம் தேதி சாக்லேட் தினமாகவும், பிப்ரவரி 10ஆம் தேதி டெடி தினமாகவும், பிப்ரவரி 11ஆம் தேதி ப்ராமிஸ் தினமாகவும், பிப்ரவரி 12ஆம் தேதி அரவணைக்கும் தினமாகவும், பிப்ரவரி 13ஆம்தேதி முத்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. 

காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் காதலர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.  தங்கள் துணைக்கு பிடித்த உணவுகளை சமைப்பது, ஒருவருக்கொருவர் பொழுதுபோக்குகளை ரசிப்பது, ஆச்சரியங்களைத் திட்டமிடுவது மற்றும் பலவற்றின் மூலம் கொண்டாடுகிறார்கள். 

பிப்ரவரி 14 அல்லது காதல் நாளின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், காதலர் வாரத்தின் ஏழு நாட்களை வருங்கால வாழ்கை துணை உடன் எவ்வாறு கொண்டாடுவது என்பதையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். 

காதலர் வாரம் 2024 தேதிகள் மற்றும் முக்கியத்துவம்:

ரோஜா தினம்
ரோஜா தினம் (Pexels)

பிப்ரவரி 7 - ரோஜா தினம்

ரோஜா தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 7 அன்று வருகிறது. அது காதலர் வாரத்தின் முதல் நாள். இந்த நாளில், காதலர்கள் ரோஜாக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்

இந்தில் தரப்படும் ரோஜாக்களுக்கு தனித்துவம் உள்ளது. சிவப்பு நிற ரோஜாக்கள் அன்பையும், மஞ்சள் நிற ரோஜாக்கள் நட்பையும், இளஞ்சிவப்பு நிற ரோஜாக்கள் பாராட்டையும் பெற்று வருகிறது. 

பிப்ரவரி 8 - ப்ரோப்போஸ் தினம் 

பிப்ரவரி 8ஆம் தேதி காதலை சொல்லும் ப்ரோபோஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களின் அன்பில் வெளிப்பாடு குறித்த விஷங்களை பகிர்ந்து கொள்ளும் நாளாக உள்ளது. 

பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்

சாக்லேட் தினமானது பிப்ரவரி 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், காதலர்கள் ஒருவருக்கொருவர் சாக்லேட்டுகளை பரிசாக வழங்குகிறார்கள். 

பிப்ரவரி 10 - டெடி டே

பிப்ரவரி 10ஆம் தேதி பிப்ரவரி 10ஆம் தேதி டெடி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலிக்கு டெட்டி பியர்களை பரிசளித்து ஆச்சரியப்படுத்துகிறார்கள். இந்த டெடி பியர் பொம்மை காதல் குறித்த கவலைகளை மறக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

வாக்குறுதி தினம்
வாக்குறுதி தினம் (Pexels)

பிப்ரவரி 11 - வாக்குறுதி நாள்

பிப்ரவரி 11 அன்று ப்ராமிஸ் டே நடைபெறுகிறது. இந்த நாளில் காதலிக்கும் காதலர்கள் எதிர்காலம் குறித்த வாக்குறுதிகளை ஒருவருக்கொருவர் பரிமாரிக்கொள்ளும் நிகழ்வாக இது உள்ளது.  

பிப்ரவரி 12 - கட்டிப்பிடி நாள்

பிப்ரவரி 12ஆம் தேதி அன்று, காதலர்கள் ஒருவரையொருவர் அரவணைத்து, ஆறுதல்படுத்திக்கொள்ளும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

முத்த தினம்
முத்த தினம் (Pexels)

பிப்ரவரி 13 - முத்த தினம்

காதலர் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 13ஆம் தேதி அன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முத்தங்கள் மூலம் பாசத்தை வெளிப்படுத்தி முத்திரை செய்யும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.  

பிப்ரவரி 14 - காதலர் தினம்

இறுதியாக, காதலர் தினம் என்பது காதலர் வாரத்தின் கடைசி நாளாகும். இது பிப்ரவரி 14 அன்று வருகிறது. இந்த நாளில் நேரத்தை ஒன்றாகச் செலவிடுவது, கையால் செய்யப்பட்ட பரிசுகளை பரிமாறிக் கொண்டு ஆச்சரியங்களை செய்வதன் மூலம் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. 

WhatsApp channel

டாபிக்ஸ்