தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Valentine Day Reciepe: Surprise Bae With Heart-shape Prawns

Valentine Day Reciepe: ஹார்ட் வடிவ இறால் உணவோடு அன்புக்குரியவரை ரொமான்டிக்காக சர்ப்ரைஸ் செய்யுங்கள்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 10, 2024 05:00 PM IST

உங்கள் பார்ட்னருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பொன்னான நேரமே. இதை ரொமான்டிக்காக கழிக்க பல புதுமைகளை விரும்புகின்ற நாம், துணையுடன் இணைந்து சாப்பிடும்போது தங்களுக்குள் இருக்கும் ரொமான்ஸ் மனநிலையை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம் என்பதற்கு சிறிய ஐடியாக்கள்.

இதய வடிவிலான இறால் ரெசிபி
இதய வடிவிலான இறால் ரெசிபி

ட்ரெண்டிங் செய்திகள்

பிறந்தநாள், விடுமுறை அவுட்டிங் அல்லது வேறெதுவும் ஸ்பெஷல் நாள்களில் கிஃப்ட்களை வாங்கி கொடுத்து துணையை திக்குமுக்காட செய்வது பெரும்பலோனோர் பாலோ செய்யும் இயல்பான விஷயமாகவே உள்ளது. அதேபோல் அவர்களுக்கு பிடித்தமான உணவை தயார் செய்து கொடுப்பதிலும் சிலருக்கு அலாதியான பிரியம் உள்ளது. நான் சமைக்க நீ சாப்பிட, எனது கைகளால் கொடுக்க, நீ அதை சுவைத்து மகிழ என்று க்யூட்டாக செல்லும் இந்த உணவு பரிமாற்ற ரொமான்ஸை வெளிப்படுத்துவதில் ஆசை இருந்தும், ஐடியா இல்லாமல் தவித்து விழிப்பவர்களே ஏராளம்.

உங்கள் துணையை சமையல் மூலம் திக்குமுக்காட வைப்பது மட்டுமில்லாமல், அவர்களிடம் ரொமான்ஸை வெளிப்படுத்தவும் செய்யலாம். அதற்கு நீங்கள் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் வடிவத்திலேயே உங்களது காதலை வெளிப்படுத்தலாம்.

அன்பு ப்ளஸ் ஆரோக்கியம் நிறைந்த உணவு நீண்ட ஆயுள் மட்டுமல்லாமல் மனதுக்கும் நிறைவை தரும். உங்கள் துணையை ருசி, ஆரோக்கியம் ஆகியவற்றோடு காதலிலும் கிறங்கடிக்க செய்யும் விதமாக உணவுகளை சமைக்கும் வித்தைகள் சிலவற்றை தெரிந்துகொள்வோம்.

இலவங்கப்பட்டை மற்றும் தேன் நிறைந்த பான்கேக்

தேவையான பொருள்கள்

அனைத்து வகை பயன்பாடு மாவு - 1 கப்

பேக்கிங் பவுடர் - 1 டிஸ்பூன்

பேக்கிங் சோடா - 1/2 டிஸ்பூன்

உப்பு - 1/4 டிஸ்பூன்

முட்டை - 1

பால் - 1 கப்

இயற்கையான இலவங்கப்பட்டை கலந்த தேன் - 2 டிஸ்பூன்

செய்முறை

அனைத்து வகை பயன்பாடு மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை பெரிய பவுலில் ஒன்றாக சேர்த்து கிளறவும். பின் முட்டை, பால், தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும்.

வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து அதில் லேசாக எண்ணெய் தடவி, இந்த மாவு கலவையை 1/4 அளவு கப்பில் எடுத்து சேர்த்து சமைக்கவும். மேற்பரப்பில் சிறிய முட்டை வடிவம் தோன்றும் வரை சுமார் 2 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் அதை திரும்பி போட்டு மீண்டும் ஒரு நிமிடம் வரை வேகவைக்கவும். இதன் மேற்பரப்பில் பட்டர் அல்லது தேன் தடவிக்கொள்ளலாம்.

நன்கு சமைத்தவுடன் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சுடச்சுட, இனிப்புச் சுவை மிகுந்த இந்த பான்கேக்கை அன்புக்குரியருடன் சேர்ந்து சுவைத்து மகிழலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

 

WhatsApp channel

டாபிக்ஸ்