Vadai : மீந்த சாதத்தை இனி வீணாக்க வேண்டாம் – அதிலிருந்து வடை செய்யலாம் – இதோ ரெசிபி!
Ice Biriyani Vadai : மீந்த சாதத்தை இனி வீணாக்க வேண்டாம். அதிலிருந்து வடை செய்யலாம். இதோ ரெசிபி, அந்த காலத்தில் பாட்டிகள் செய்வது.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை – 1 கப்
மீந்த சாதம் – 1 கப் (தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
கேரட் – ஒரு கைப்பிடி (துருவியது)
வறுத்த வேர்க்கடலை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – வடை பொறிக்க தேவையான அளவு
செய்முறை
பொட்டுக்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பவுடராக அரைத்துவிட வேண்டும். சாதத்தையும் மிக்ஸியில் தண்ணீரின்றி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த பொட்டுக்கடலை, அரைத்த பழைய சாதம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய கேரட், வறுத்த கடலை, உப்பு தேவையான அளவு சேர்த்து அனைத்தையும் நன்றாக வடை பதத்துக்கு பிசைந்துகொள்ள வேண்டும்.
கடாயில் வடை சுடும் அளவுக்கு எண்ணெய் சேர்த்து அதை சூடாக்கி, அதில் சிறு சிறு வடைகளாக தட்டி சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.
மீந்த சாதத்தில் சுவையான வடை தயாராகிவிட்டது. குழந்தைகளுக்கு இதை செய்துகொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
மாவில் தண்ணீர் அதிகம் சேர்த்து விடக்கூடாது. தேவைப்பட்டால் தெளித்துதான் பிசைய வேண்டும்.
மீந்துபோன சாதத்தை தண்ணீர் ஊற்றி பழைய சாதம் ஆக்கினால் அது உடலுக்கு நன்மை செய்யும் உணவுகளில் ஒன்று. அந்த காலத்தில் பழைய சாதம்தான் பிரதான காலை உணவாக இருந்தது. ஆனால் இன்று அதை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை.
பழைய சாதத்தில் உள்ள ப்ரோபயோடிக்குகள் உடலுக்கு நன்மை சேர்ப்பவை. அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
எனவே பழைய சாதத்தை குறைந்தபட்சம் வெயில் காலத்திலாவது நாம் உணவில் சேர்த்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் உடலுக்கு குளிர்ச்சியை வழங்கக்கூடியது பழைய சாதமும், அதை ஊறவைக்க பயன்படுத்தும் நீராகாரமும். இந்த வடையை பழைய சாதத்திலும் செய்யலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.